ஏசி இல்லா ரயில் பெட்டி வருது.. எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைப்பு.. ரயில்வே குட்நியூஸ்
டெல்லி: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்தியா முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
ரயில்களில் அதிகம் பயன்பாடுகளை கொண்டது ஜெனரல் கம்பார்ட்மென்ட் என்ற சொல்லப்படும் பொதுப்பெட்டியாகும்.. ரயில்கள் புறப்படும் கடைசி நேரத்திலும், தங்களது ரயிலை எளிதாக அடையாளம் கண்டு விரைந்து ஓடிவந்து ஏறிவிடுவதற்காகவே, பொதுப்பெட்டிகள் ரயிலின் முதலிலும், கடைசியிலும் அமைக்கப்படுகின்றன.

பொதுப்பெட்டிகள்: இந்த ஜெனரல் கோச்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். சாதாரண, நடுத்தர ஏழை மக்கள் பெரிதும் பயன்படுத்தக்கூடிய பெட்டியாக இந்த ஜெனரல் கோச்கள் உள்ளன..
தெற்கு ரெயில்வேயில் பல்வேறு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டாலும், முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கை மட்டும் குறைவதேயில்லை.. அதிலும், விடுமுறை தினங்களில் பொதுப்பெட்டியில் பயணிக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
பயணிகள் கோரிக்கை: எனவேதான், ஒருசில விரைவு ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. வரும் 2025 ஜனவரி முதல் கூடுதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருப்பதாக சமீபத்தில்கூட செய்திகள் வெளியாகியிருந்தன..
அதுமட்டுமல்ல, 2 அல்லது 3 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ள ரெயில்கள், 4 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாகவும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு, முன்பதிவில்லாத பெட்டி இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது.
583 பொது பெட்டிகள்: எனினும், ரயில்களில் தேவைக்கேற்ப பயணிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா முழுவதுமுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்த ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் சொன்னதாவது, "ரயில்களில் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு என்றுமே முன்னுரிமை உண்டு. அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ரயில்கள்: கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 583 புதிய பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை 229 ரயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மேலும் 1000 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் கூடுதலாக இணைக்க திட்டமிட்டிருக்கிறோம்.. புதிய பெட்டிகள் இணைப்பு மூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடுதலாக பயணிக்கலாம்.
அடுத்து வரும் 2 வருடங்களில், 10,000க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படும். அதில் 6000 பொது பெட்டிகள், 4000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகும். இந்த வசதிகள் வந்தபின்னர் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications