டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. 7 மாநிலங்களில் நடந்த 6ம் கட்ட வாக்குப்பதிவு.. 63% வாக்குகள் பதிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 59 தொகுதிகளில் இன்று நடந்தது.

லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இது வரை ஐந்து கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்தது.

இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும்.

இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடந்தது இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது. இங்குதான் இன்று அதிக இடங்களில் தேர்தல் நடந்தது . இன்றும் பாதுகாப்பு அதேபோல் அளிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது.

மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர். இது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடந்தது .

உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடந்தத . இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்தித்தனர்.

அதேபோல் மேற்கு வங்கத்தில் ஆறாவது கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . அங்கு ஏற்கனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . ஹரியானாவில் 10 இடங்களில் தேர்தல் நடந்தது .

அதேபோல் டெல்லியில் 7 இடங்களில் இன்று தேர்தல் நடந்தது . இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

மொத்தமாக இந்த தேர்தலில் 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த தேர்தலில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு விவரங்கள்:

பீகாரில் 59.40% வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 80.51% வாக்குப்பதிவு

ஹரியானாவில் 68.17% வாக்குப்பதிவு

மத்திய பிரதேசத்தில் 64.78% வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் 54.26% வாக்குப்பதிவு

ஜார்கண்டில் 64.08% வாக்குப்பதிவு

டெல்லியில் 59.24% வாக்குப்பதிவு

Newest First Oldest First
6:04 PM, 12 May

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது
4:58 PM, 12 May

பீகார்:

பீகாரில் 4 மணி நிலவரப்படி 44.40% வாக்குப்பதிவு
4:58 PM, 12 May

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 4 மணி நிலவரப்படி 70.51% வாக்குப்பதிவு
4:58 PM, 12 May

ஹரியானா:

ஹரியானாவில் 4 மணி நிலவரப்படி 51.86% வாக்குப்பதிவு
4:58 PM, 12 May

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 4 மணி நிலவரப்படி 52.78% வாக்குப்பதிவு
4:58 PM, 12 May

உத்தர பிரதேசம்:

உத்தர பிரதேசத்தில் 4 மணி நிலவரப்படி 43.26% வாக்குப்பதிவு
4:57 PM, 12 May

ஜார்கண்ட்:

ஜார்கண்டில் 4 மணி நிலவரப்படி 58.08% வாக்குப்பதிவு
4:57 PM, 12 May

டெல்லி:

டெல்லியில் 4 மணி நிலவரப்படி 45.24% வாக்குப்பதிவு
4:56 PM, 12 May

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலில் 59 தொகுதிகளில் 4 மணி வரை 50.77% வாக்குப்பதிவு
3:32 PM, 12 May

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலில் 59 தொகுதிகளில் 2 மணி வரை 39.80% வாக்குப்பதிவு
2:24 PM, 12 May

பீகார்:

பீகாரில் 1 மணி நிலவரப்படி 21% வாக்குப்பதிவு
2:24 PM, 12 May

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரப்படி 40.98% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

ஹரியானா:

ஹரியானாவில் 1 மணி நிலவரப்படி 30.09% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 32.21% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

உத்தர பிரதேசம்:

உத்தர பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 28.8% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

ஜார்கண்ட்:

ஜார்கண்டில் 1 மணி நிலவரப்படி 41.21% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

டெல்லி:

டெல்லியில் 1 மணி நிலவரப்படி 20.08% வாக்குப்பதிவு
2:23 PM, 12 May

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலில் 59 தொகுதிகளில் 1 மணி வரை 29.44% வாக்குப்பதிவு
1:50 PM, 12 May

மேற்கு வங்கத்தில் சிறு சிறு வன்முறைகள் நடப்பதால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் சிறு சிறு வன்முறைகள் நடப்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கலவரம் காரணமாக மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய வாய்ப்பு
12:45 PM, 12 May

பீகார்:

பீகாரில் 12 மணி நிலவரப்படி 20.70% வாக்குப்பதிவு
12:45 PM, 12 May

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 12 மணி நிலவரப்படி 38.26% வாக்குப்பதிவு
12:45 PM, 12 May

ஹரியானா:

ஹரியானாவில் 12 மணி நிலவரப்படி 23.26% வாக்குப்பதிவு
12:45 PM, 12 May

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 12 மணி நிலவரப்படி 28.25% வாக்குப்பதிவு
12:44 PM, 12 May

உத்தர பிரதேசம்:

உத்தர பிரதேசத்தில் 12 மணி நிலவரப்படி 21.75% வாக்குப்பதிவு
12:44 PM, 12 May

ஜார்கண்ட்:

ஜார்கண்டில் 12 மணி நிலவரப்படி 31.75% வாக்குப்பதிவு
12:44 PM, 12 May

டெல்லி:

டெல்லியில் 12 மணி நிலவரப்படி 19.55% வாக்குப்பதிவு
12:44 PM, 12 May

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலில் 59 தொகுதிகளில் 12 மணி வரை 25.18% வாக்குப்பதிவு
12:31 PM, 12 May

டெல்லி:

டெல்லியில் சஞ்சார் பவனில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்.
12:30 PM, 12 May

டெல்லி:

டெல்லியின் லோதி எஸ்டேட்டில் வாக்களித்த பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நம் நாட்டிற்காக ஜனநாயகத்தை காக்க நாம் போராடி வருகிறோம். அதை மனதில் கொண்டு நான் வாக்களித்தேன் என்றார் பிரியங்கா.
12:02 PM, 12 May

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் 6-ஆவது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு பாங்குராவில் அமைக்கப்பட்ட 254-ஆவது வாக்குச் சாவடி மையத்தில் மோசடியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதாக பாஜக குற்றம்சாட்டினர். இதையடுத்து இரு கட்சிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
READ MORE

6th phase Loksabha election- Live updates
English summary
BJP expecting big challange in the 6th phase Loksabha election, as many states become opposition parties helm. Live updates here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X