நீட், ஜேஇஇ-க்கு எதிர்ப்பு: மமதா உட்பட 7 பாஜக அல்லாத முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு
டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீட், ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான அமரீந்தர்சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகல், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி. கொரோனா லாக்டவுன் காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் தேர்வுகளை நடத்துவது சரியானது அல்ல. ஆகையால் இந்த தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்கவேண்டும்.

நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து மமதா பானர்ஜி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தில் நீட்,ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவது என்றும் 7 மாநில முதல்வர்களும் கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications