மத்திய கல்வி நிறுவனங்களில் 70% எஸ்சி, எஸ்டி, ஓபிசி பணியிடங்களை நிரப்பாத மத்திய பாஜக அரசு
டெல்லி: மத்திய கல்வி நிறுவனங்களில் சுமார் 70% எஸ்சி, எஸ்டி, ஓபிசி பணியிடங்களை மத்திய பாஜக அரசு நிரப்பாமல் வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபாவில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது
- மத்திய பல்கலைக்கழகங்களில் 33 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது அரசுக்கு தெரியுமா ?
அதனால் கல்வி தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அரசுக்கு தெரியுமா ?
- அதன் விவரங்களையும் காரணங்களையும் தெரிவிக்கவும்
- காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?
- குறிப்பாக உயர் கல்வித் துறையில் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
- ஐஐடி , ஐஐஎம் , மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களைத் தருக
என கேள்வி கேட்டிருந்தார் ரவிக்குமார் எம்.பி. இதற்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விரிவான பதில் விவரம்:
45 மத்திய பல்கலைக்கழகங்களில் 18956 பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன; இந்த 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6180 பேராசிரியர் பதவிகள் நிரப்பப்படவில்லை. மொத்தம் உள்ள ஐஐடிகளில் மொத்த பேராசிரியர் பணியிடம் 11,170; இதில் நிரப்பப்படாதவை- 4502; மொத்தம் உள்ள ஐஐஎம்களில் பேராசிரியர் பணியிடங்கள் 1566; இதில் நிரப்பப்படாதவை 493.
மத்திய பல்கலைக் கழகங்களில் எஸ்சி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாதவையும்:

எஸ்சி பணியிடங்கள்:
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பேராசிரியர் பணியிடங்கள் - 307
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 231
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி இணை பேராசிரியர் பணியிடங்கள் - 620
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி இணை பேராசிரியர் பணியிடங்கள் காலி- 401
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி உதவி பேராசிரியர் பணியிடங்கள் - 1357
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 276

எஸ்டி பணியிடங்கள்:
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி பேராசிரியர் பணியிடங்கள் - 142
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 124
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி இணை பேராசிரியர் பணியிடங்கள் - 301
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி இணை பேராசிரியர் பணியிடங்கள் காலி- 232
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி உதவி பேராசிரியர் பணியிடங்கள் - 698
மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 188

ஓபிசி பணியிடங்கள்:
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி பேராசிரியர் பணியிடங்கள் - 367
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 311
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி இணை பேராசிரியர் பணியிடங்கள் - 752
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி இணை பேராசிரியர் பணியிடங்கள் காலி- 576
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி உதவி பேராசிரியர் பணியிடங்கள் - 2332
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 672

ஐஐஎம் நிலைமை:
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எஸ்சி பேராசிரியர் பணியிடங்கள் - 97
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எஸ்சி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 53
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எஸ்டி பேராசிரியர் பணியிடங்கள் - 40
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எஸ்டி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 34
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஓபிசி பேராசிரியர் பணியிடங்கள் - 184
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஓபிசி பேராசிரியர் பணியிடங்கள் காலி- 98
இவ்வாறு மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான மொத்த பணியிடங்களில் 30% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; எஞ்சிய 70% இடங்கள் நிரப்பப்படவில்லை என தெரியவந்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications