லோக்சபா தேர்தல்: 744 கட்சிகள்- 8360 வேட்பாளர்கள்! 1967 முதல் வெற்றியே பெறாத கட்சியும் களத்தில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் தற்போதைய பாஜக ஆட்சியே நீடிக்குமா? எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.

10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் நிலையில் ஹாட்ரிக் வெற்றிக்காக லோக்சபா தேர்தல் களத்தில் பாஜக அதிதீவிரமாக களமாடுகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக 28 கட்சிகளை ஒருங்கிணைத்த "இந்தியா" கூட்டணி சமமான போட்டியை களத்தில் கொடுத்து வருகிறது.

Lok Sabha Election 2024 election commission 2024

லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ல் நடைபெறும். இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி 7 கட்டமாக பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

18-வது லோக்சபா தேர்தல் தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்:

* உலகத்திலேயே தேர்தல் களத்தில் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவது இந்தியாவில் மட்டும்தான். இந்தியாவில் தற்போதைய தேர்தலில் 744 அரசியல் கட்சிகள் களம் காண்கின்றன. சுயேட்சைகள் உட்பட 8360 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் லோக்சபா தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
* 8360 வேட்பாளர்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 4,440. சுயேட்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை 3,920. இத்தனை ஆயிரம் பேரில் வெற்றி பெறப் போவது என்னவோ 543 வேட்பாளர்கள்தான்.
* நாட்டின் முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது 1874 பேர் வேட்பாளர்கள். அதை ஒப்பிடுகையில் 4 மடங்கு வேட்பாளர்கள் அதிகம்.
* 18வது லோக்சபா தேர்தலில் மிக அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில்தான் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
* உலக நாடுகள் சிலவற்றில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எண்ணிக்கை: இந்தோனேசியா 18; அமெரிக்கா 57; பிரான்ஸ் 16; ஸ்பெயின் 59; தென் கொரியா 44; இங்கிலாந்து 71; பிரேசில் 32; தாய்லாந்து 70; தென்னாப்பிரிக்கா 48 ; ஜப்பான் 13; இத்தாலி 30; கொலம்பியா 46
* இந்தியாவில் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டவை பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி. 2019 தேர்தலில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் 56% வாக்குகளைப் பெற்றன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 4% வாக்குகளைத்தான் பெற்றிருந்தன.
* 2019 லோக்சபா தேர்தலில் 24 இடங்களில் வென்ற திமுகதான் லோக்சபாவில் 3-வது பெரிய கட்சியாகும்.
* லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முக்கியமான மாநில கட்சிகள்: அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஆர்எஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டவை.
* 1967-ம் ஆண்டு ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு ஒரு முறைகூட வெல்லாத அரசியல் கட்சிகள் இப்போதைய தேர்தலிலும் போட்டியிடுகின்றன.
* 1967-ல் போட்டியிட்டது Akhil Bharatiya Jan Sangh (ABJS). அப்போதும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 2019 தேர்தல் வரையிலும் ஒரு தேர்தலிலும் அந்த கட்சி வென்றதே இல்லை. 3 லோக்சபா தேர்தல்களில் மட்டும் அந்த கட்சி போட்டியிடாமல் இருந்தது. இப்படியான பட்டியலில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+