3-வது அலை.. இந்தியாவில் 3 மெட்ரோ நகரங்களிலிருந்து 75 சதவீத ஓமிக்ரான்.. டாஸ்க் ஃபோர்ஸ் வார்னிங்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலை தொடங்கியுள்ள நிலையில் மும்பை, டெல்லி கொல்கத்தா ஆகிய 3 மெட்ரோ நகரங்களிலிருந்து 75 சதவீத ஓமிக்ரான் கேஸ்கள் பரவியுள்ளதாக கொரோனா சிறப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் புதிய வேரியண்ட் ஓமிக்ரான் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்தந்த நாடுகளில் கொரோனா அடுத்த அலை தீவிரமடைய காரணமாக இருந்தது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரானால் 4ஆவது அலை தொடங்கியது. ஓமிக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களை அந்தந்த நாட்டு அரசு கண்காணித்து வந்தது.

ஓமிக்ரான் பரவல்
எனினும் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 1700 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 639 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

டாஸ்க் ஃபோர்ஸ்
இந்த நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு பிரிவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக 12 சதவீதம் பேர் ஓமிக்ரான் பாதித்தவர்கள் என கண்டறியப்பட்டது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 28 சதவீதம் அதிகமாகும்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வருகிறது. நான் முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் 75 சதவீதம் பேருக்கும் மேல் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை.

பயன்பாட்டுக் காலம்
இவை அனைத்து புதிய வேரியண்ட்டால் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. 15 வயது முதல் 18 வயதினருக்கு பயன்படுத்தப்படும் கோவாக்சினின பயன்பாட்டுக் காலம் 12 மாதங்களாக அதிகரித்துள்ளது குறித்து எந்த கவலையும் வேண்டாம். அவ்வாறு அதிகரித்ததால் அது செயல்திறனுடையதாகவே இருக்கும் என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications