இன்று 750 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதவில்லை.. 48% ஆப்சென்ட்.. ஷாக் தகவலை வெளியிட்ட என்.டி.ஏ!
டெல்லி: கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு இன்று நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன.

இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, தேர்வு ழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு இன்று 7 மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மறு தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில், மறு தேர்வுக்கு தகுதி பெற்ற 1,563 பேரில் 813 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை. அதாவது, இன்று நடந்த நீட் மறு தேர்வில் 48% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
சண்டிகரில் 2 பேர் மறு தேர்வு எழுத தகுதியானவர்கள், இருவரும் வரவில்லை. சத்தீஸ்கரில் 602 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றனர், 311 பேர் வரவில்லை, 291 பேர் மறுதேர்வு செய்தனர்.
குஜராத்தில் மறுதேர்வு எழுத ஒருவர் தகுதி பெற்றிருந்த நிலையில் அவர் இன்று தேர்வை எழுதினார். ஹரியானாவில் மறு தேர்வுக்கு 494 பேர் தகுதி பெற்றிருந்தனர், அவர்களில் இன்று 207 பேர் தேர்வு எழுத வரவில்லை, 287 பேர் மறுதேர்வு செய்தனர்.
மேகாலயாவில் 464 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 230 பேர் தேர்வு எழுத வரவில்லை, 234 பேர் இன்று மறுதேர்வு எழுதினர். ஒட்டுமொத்தமாக 1,563 பேரில் 813 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications