Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் சில காலத்தில் மிகப் பெரிய திட்டம்.. சுதந்திர தின விழாவில் மோடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம் என 75 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் அறிவித்தார்.

Indias Independence Day 2021 Live Updates in Tamil

10:04 AM
Aug 15, 2021
அப்துல் கலாம் விருது - பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் லட்சுமணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
9:54 AM
Aug 15, 2021
சீன போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டியவர் பேரறிஞர் அண்ணா, பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்காக நிதி திரட்டியவர் கருணாநிதி. கார்கில் போரின் போது 3 தவணைகளாக நிதி திரட்டி கொடுத்தவரும் கருணாநிதிதான்.
9:50 AM
Aug 15, 2021
தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சு காற்று மூலமே இந்தியாவின் சுதந்திரம் கட்டி எழுப்பப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின்
9:49 AM
Aug 15, 2021
தமிழ்ச் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரீகத்தால், பழக்கவழக்கத்தால் உயர்வடைய வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்
9:45 AM
Aug 15, 2021
மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
9:36 AM
Aug 15, 2021
ஔவையார் விருது- டாக்டர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது. முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை, சாயல்குடி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
9:31 AM
Aug 15, 2021
சிறந்த மூன்றாம் பாலினத்தவருக்கான விருதை பெற்றார் கிரேஸ் பானு
9:20 AM
Aug 15, 2021
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமை சமுதாயமாக நாம் மாற வேண்டும். நேர்மையுடைய தமிழ்நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அனைவரும் காந்திக்கு உருதுணையாக இருந்தனர்.
9:18 AM
Aug 15, 2021
விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரின் ஓய்வூதியம் ரூ 9 ஆயிரமாக அதிகரிப்பு
9:18 AM
Aug 15, 2021
சீன போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டியவரக் பேரறிஞர் அண்ணா, பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்காக நிதி திரட்டியவர் கருணாநிதி. கார்கில் போரின் போது 3 தவணைகளாக நிதி திரட்டி கொடுத்தவரும் கருணாநிதிதான்.
9:17 AM
Aug 15, 2021
இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி. திராவிடக் கட்சியின் ஆணிவேரான நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு இந்த ஆண்டு. மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ 6 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.
9:07 AM
Aug 15, 2021
இந்திய தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
9:07 AM
Aug 15, 2021
தாயின் மணிக் கொடி பாரீர் என தொடங்கி தனது சுதந்திர தின விழா உரையை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
8:51 AM
Aug 15, 2021
கோட்டை கொத்தளத்திற்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
8:47 AM
Aug 15, 2021
தமிழக தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்ற புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். முதல் முறையாக இன்றைய தினம் தேசிய கொடியை ஏற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
8:47 AM
Aug 15, 2021
நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப் பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 லட்சம் கோடி ரூபாயில் இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்க போகிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏராளமானவர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் பரிசோதனையில் உள்ளது. போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
8:44 AM
Aug 15, 2021
நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப் பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 லட்சம் கோடி ரூபாயில் இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்க போகிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏராளமானவர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளோம்.
8:41 AM
Aug 15, 2021
நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப் பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 கோடியில் இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
8:32 AM
Aug 15, 2021
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் மிகப் பெரிய திட்டம் வரப்போகிறது. நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்த திட்டம் உதவி செய்யும். கதி சக்தி என்ற இந்த வேகமான திட்டம் நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்யும்.
8:32 AM
Aug 15, 2021
அம்ருத் மகோத்ஸவம் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினம் வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்.
8:32 AM
Aug 15, 2021
கடன் அட்டைகள் வழங்குதல் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பெருமையின் சின்னமாக சிறு விவசாயிகள் மாற வேண்டும் என விரும்புகிறோம். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் நமது பழம் பெருமைகளை பாதுகாக்க வேண்டும். உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய நாம் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
8:18 AM
Aug 15, 2021
காய்கறிகள், தானியங்கள் உற்பத்தியில் விஞ்ஞானிகளின் உதவி கிடைத்து வருகிறது. சிறு விவசாயிகளை மனதில் கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
8:14 AM
Aug 15, 2021
ஆழ்கடல் பரிசோதனை மூலம் புதிய வளங்களை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் 110 பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஒரு சந்தையை உருவாக்கம் டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவி செய்யும்.
8:09 AM
Aug 15, 2021
வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் , லடாக் உள்ளிட்ட பகுதிகளில் மலை சாதியினர் வாழும் பகுதிகளை தகவல் தொடர்பால் இணைக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனைமரத் தோப்புகள் ஆகியவற்றை வளர்க்க தனி கவனம் செலுத்தப்படும்.
8:06 AM
Aug 15, 2021
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
8:06 AM
Aug 15, 2021
அரசின் திட்டங்கள் ஒரு சிலரை கூட சென்றடையாமல் போகும் அவல நிலை இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். மக்கள் மருந்தகம் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துங்கள் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு நல்ல சத்தான அரிசி வழங்கப்படுகிறது.
8:02 AM
Aug 15, 2021
கடந்த இரு ஆண்டுகளில் 4 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் சாலை, 100 சதவீதம் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
7:56 AM
Aug 15, 2021
நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம். மின் இணைப்பு , ஓய்வூதியம், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை கடைக் கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம்.
7:53 AM
Aug 15, 2021
உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது. நகரம், கிராமம் என்றில்லாம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
7:51 AM
Aug 15, 2021
உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது என பிரதமர் மோடி பெருமிதம்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+