சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு புது சிக்கல்.. "பணத்திற்கு அனுமதி இல்லை".. மத்திய அரசு தடை.. அடடா
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு தனியார் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் மூலம் அளிக்கும் விருதுகள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதனை சரிபார்க்கும் நோக்கில் பயோமெட்ரிக் வருகை பதிவினை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆதார்: அதன்படி, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப்பதிவு செய்யப்படும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.. ஊழியர்கள் எந்தவிதமான சாக்குபோக்கும் கூறாமல் ABAAS ஐப் பயன்படுத்தி தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் பிறக்கப்பிட்ட உத்தரவில், "துறைத் தலைவர்கள் (எச்.ஓ.டி.) பணியாளர் வருகையை அதாவது அடெண்டன்சை அடிக்கடி கண்காணித்து, சரியான பணி நேரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.. பணியாளர்கள் சரியான வேலை நேரத்தை கடைபிடிப்பதையும், தாமதமாக வருவதை தவிர்ப்பதையும் கண்காணித்து பணியாளர்களை கவனித்து கொள்ள வேண்டும்.
அதிரடி நடவடிக்கை: தாமதமாக வருவதையும், அலுவலக நேரம் முடியும் முன்பே கிளம்பி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கும் ஊழியர்களின் நடவடிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய ஊழியர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடியினால், அரசு ஊழியர்கள் கதிகலங்கி வரும்போது, இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு தனியார் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் மூலம் அளிக்கும் விருதுகள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்: மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் (அ) அமைப்புகள் வாயிலாக விருதுகள் வழங்கப்படுவது பற்றி புது கட்டுப்பாடுகளை, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இன்றைய தினம் உத்தரவிட்டிருக்கிறது.
"அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் பணம் (அ) பணம் சார்ந்த வசதிகளை கொண்ட விருதுகளை பெற இயலாது. அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் 7வது ஊதியக்குழுவின்படி ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.. எனவே, தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கக்கூடிய விருதுகளானது சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்அனுமதியை பெறவேண்டும்..
அனுமதி பெற வேண்டும்: அத்துடன், இதற்குரிய முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட துறை அல்லது அதிகாரியை சேர்ந்ததாக இருக்கும். இதுதவிர விருது வழங்கும் நிறுவனம் எந்த வித குற்றங்களும் அற்ற, நற்சான்றிதழ்கள் பெற்றதாக இருக்க வேண்டும்" என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications