மத்திய அரசு ஊழியர்களுக்கு! நவராத்திரிக்கு பிறகு ஜாக்பாட்! கதவை தட்டும் "தனலட்சுமி"! எப்படி தெரியுமா?
டெல்லி: மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ஊழியர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்குவதால் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வரும் என பலர் காத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நவராத்திரிக்கு பிறகு அகவிலைப்படி உயரும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த முறை அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால் தற்போது 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும் என தெரிகிறது. அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும்.
ஒரு ஊழியரின் வருமானம் மாதத்திற்கு ரூ 50 ஆயிரம், அடிப்படை ஊதியம் ரூ 15 ஆயிரமாக இருந்தால் அவர் தற்போது 6300 ரூபாய் அகவிலைப்படியாக பெறுகிறார். இதே அகவிலைப்படி உயர்ந்தால் கூடுதலாக ரூ 450 அதிகரித்து ரூ 6,750 ஊதியம் அதிகரிக்கும். அகவிலைப்படி பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்த்தப்படுகிறது.
பொதுவாக ஜனவரி, ஜூலை மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்ந்ததால் 42 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என சொல்லப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications