88 நிமிடங்கள் மோடி, ராகுல் காந்தி ஆலோசனை.. பரபரத்த டெல்லி.. எழுதி கொடுத்து திரும்பினார்
பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது இன்று 88 நிமிடங்கள் நீண்ட சந்திப்பு நடைபெற்றது. தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கான வேட்பாளர்களை விவாதிக்க மட்டுமே இக்கூட்டம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வளவு நேரம் நடந்த அக்கூட்டம் அரசியல் வட்டாரங்களிலும் நாடாளுமன்றத்திலும் மிகப்பெரிய யூகங்களைத் தூண்டியுள்ளது.
தலைமை தகவல் கமிஷனர், 8 தகவல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், அவர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெறுவர். இம்முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். 88 நிமிட விவாதத்தில், தலைமைத் தகவல் ஆணையர் மட்டுமல்லாது எட்டு தகவல் ஆணையர்கள் மற்றும் ஒரு லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது தெரியவந்தது.

ராகுல் காந்தி அனைத்து நியமனங்களுக்கும் தனது ஆட்சேபத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறின.
இதுபோன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆட்சேபங்கள் தெரிவிப்பது இயல்பானதுதான். தற்போது, மத்திய தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையர் உட்பட எட்டு பதவிகள் காலியாக உள்ளன. ஹிராலால் சமாரியா செப்டம்பர் 13 அன்று ஓய்வு பெற்றதிலிருந்து தலைமைத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
தகவல் பெறும் உரிமை (RTI) விண்ணப்பதாரர்களின் புகார்கள், மேல்முறையீடுகளை விசாரித்து தகவல்களை வெளியிடும் முக்கியப் பணியை CIC மேற்கொள்கிறது. ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமார் திவாரி ஆகிய இரு தகவல் ஆணையர்கள் மட்டுமே தற்போது பணிகளைக் கையாள்வதால், 30,838 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரதமரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவே ஆணையர் நியமனங்களைப் பரிந்துரைக்கிறது என RTI சட்டம், பிரிவு 12(3) கூறுகிறது.












Click it and Unblock the Notifications