Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8-வது சர்வதேச யோகா தினம்:மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 8-வது சர்வதேச யோகா தினம் (செவ்வாய்க்கிழமை) உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மனித நேயத்திற்காக யோகா' என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தை வெற்றிகரமாக்கி, மேலும் பிரபலப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன்21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி உலக நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

8th International Yoga Day Live Updates: PM Modi to participate Mass Yoga Demonstration in Mysore

Jun 21, 2022, 10:35 am IST

திருவனந்தபுரம் ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.
Jun 21, 2022, 10:33 am IST

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ராஜ்பவனில் யோகாசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
Jun 21, 2022, 9:32 am IST

மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் நாளந்தாவில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
Jun 21, 2022, 9:22 am IST

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் டிஎஸ் திருமூர்த்தி, ஐநா கட்டிடத்தின் கீழ் வடக்கு புல்வெளியில் யோகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Jun 21, 2022, 9:14 am IST

ஹைதராபாத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, பிவி சிந்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
Jun 21, 2022, 9:09 am IST

டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினார்.
Jun 21, 2022, 9:06 am IST

சர்வதேச யோகா தின கொண்டாட்டம் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது.
Jun 21, 2022, 9:04 am IST

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகாசனம் செய்தார்.
Jun 21, 2022, 9:03 am IST

இந்திய கடற்படையால் ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார்.
Jun 21, 2022, 8:40 am IST

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் யோகா செய்தார்.
Jun 21, 2022, 8:34 am IST

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கெவாடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை அருகே யோகா செய்தார்.
Jun 21, 2022, 8:30 am IST

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகாசனம் செய்தனர்.
Jun 21, 2022, 8:29 am IST

யோகா தினத்தை முன்னிட்டு பாபா ராமதேவ் யோகா மேற்கொண்டார்
Jun 21, 2022, 8:27 am IST

இமாச்சல பிரதேச பனியில் 14,000 அடி உயரத்தில் உள்ள ரோஹ்தாங் பாஸில் இந்தோ-திபெத் எல்லை காவல்துறையின் மத்திய பனிச்சறுக்கு குழு வீரர்கள் யோகா செய்து அசத்தினர்.
Jun 21, 2022, 8:21 am IST

ஹரியானா முதல்வர் எம் எல் கட்டார் பிவானியில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினார்.
Jun 21, 2022, 8:19 am IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் அமைச்சர் எம்இஏ வி முரளீதரன் பங்கேற்றார்.
Jun 21, 2022, 8:17 am IST

சென்னை ராஜ்பவனில் யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர். என் ரவி யோகா
Jun 21, 2022, 8:02 am IST

மைசூருவில் நடந்த யோகா கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கிவிட்டு பிரதமர் மோடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Jun 21, 2022, 7:57 am IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் யோகாசனம் செய்தார்
Jun 21, 2022, 7:56 am IST

ராஷ்டிரபதி பவனில் யோகாசனம் செய்யும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
Jun 21, 2022, 7:53 am IST

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மக்களுடன் இணைந்து யோகா செய்தார்
Jun 21, 2022, 7:52 am IST

சர்வதேச யோகா தினத்தையொட்டி ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமை தாங்கினார்.
Jun 21, 2022, 7:48 am IST

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கவுகாத்தி லச்சித் காட்டில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் முன் யோகாசனம் செய்யும் வீரர்கள்.
Jun 21, 2022, 7:44 am IST

பிரதமர் மோடி யோகா செய்யும் புகைப்படங்கள்
Jun 21, 2022, 7:41 am IST

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார்.
Jun 21, 2022, 7:40 am IST

17,000 அடி உயரத்தில் கடும் குளிரில் யோகா செய்து அசத்திய இந்தோ - திபெத் எல்லை வீரர்கள்!
Jun 21, 2022, 7:34 am IST

உத்தர பிரதேசத்தில் அம்மாநில அமைச்சர்கள் யோகா செய்தனர்
Jun 21, 2022, 7:32 am IST

நாம் எவ்வளவு மன அழுத்தமாக இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசிப்படுத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும். ஆகவே யோகாவை கூடுதல் வேலையாக நினைக்க வேண்டியதில்லை. நாமும் யோகாவை அறிய வேண்டும், நாமும் யோகாவாக வாழ வேண்டும், நாமும் யோகாவை அடைய வேண்டும், நாமும் யோகாவை பின்பற்ற வேண்டும் - டிவிட்டரில் பிரதமர் மோடி
Jun 21, 2022, 7:31 am IST

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் மனிஷ் சிசோடியா யோகா செய்தனர்
Jun 21, 2022, 7:29 am IST

மைசூரில் பிரதமர் மோடி யோகா செய்வதற்காக செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகள்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+