மத்திய அரசு ஊழியர்களுக்கு பணமழை.. 186% உயரபோகுது சம்பளம்? 8-வது சம்பள கமிஷனால் அடிக்கும் ஜாக்பாட்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு எனப்படும் பே கமிஷன் அமைக்க கேபினட் கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 வது ஊதிய கமிஷனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது பெறும் ஊதியத்தில் இருந்து 186 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக பரிந்துரை செய்ய ஊதிய கமிஷன் அமைக்கப்படுகிறது. பணவீக்கம் உள்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு இந்த பே கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும். இந்த பரிந்துரைகளின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு முதல் 7 பே கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அமலில் இருக்கும் 7-வது பே கமிஷன் கடந்த 2016-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

8-வது ஊதியக்குழு
அதன் காலம் அடுத்த ஆண்டு (2026) முடிவடைகிறது. எனவே, 8-வது பே கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. ஊதிய கமிஷனில் இடம் பெறும் உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை பெற்று, அரசுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரை அளிப்பார்கள். மத்திய அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த இந்த 8-வது பே கமிஷனுக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் ஒப்புதல் அளித்தது.
8-வது ஊதியக்குழு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த நிதி ஆண்டு முடிந்த பின் மார்ச் 2026ல் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் 1 - 2026 தேதியில் இருந்து புதிய சம்பளம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 8-வது பே கமிஷன் மூலமாக உள்துறை உள்ளிட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்
இந்த பே கமிஷனில் எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஊதிய உயர்வு பரிந்துரையில் ஃபிட்மெண்ட் பேக்டர் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் தற்போதைய ஊதியம், அடுத்து பணியில் சேர இருக்கும் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட காரணிகளை கொண்டு கணக்கிடப்படும் ஒரு மல்டிபிளையர் தான் ஃபிட்மெண்ட் பேக்டர் என்று சொல்லப்படுகிறது.
8-வது ஊதிய கமிஷனில் இந்த ஃபிட்மேண்ட் ஃபேக்டர் என்பது 1.92 முதல் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்று முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பார்த்தால் குறைந்தபட்ச சம்பளமானது ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.51,480 ஆக உயர வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் பென்ஷன் 9 ஆயிரத்தில் இருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், குறைந்தபட்ச பிட்மெண்ட் பேக்டர் என்பது 7-வது ஊதிய கமிஷனில் நிர்ணயிக்கப்பட்டது போல 2.57 அக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான ஜேசிஎம் வலியுறுத்துதாக சொல்லப்படுகிறது.
அடிப்படை சம்பளமே 46,000 ரூபாய்
எனவே, 2.57 என்ற ஃபிட்மெண்ட் பேக்டர் கணக்கிடப்பட்டால் தற்போது அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறும் ஊழியர்களின் சம்பளம் ரூ.46,260 ஆக அதிகரிக்கும். இதேபோல பென்ஷனும் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.23,130 ஆக உயரும். எனினும் ஃபிட்மெண்ட் பேக்டர் அதிகமாக இருந்தால் அரசுக்கு நிதி சுமை ஏற்படும் எனவும் 1.92 என்பது மிகவும் உகந்த ஆப்ஷனாக இருக்கும் என நிதித்துறை செயலர் சுபாஷ் கார்க் கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும் 8-வது ஊதிய கமிஷனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவென அதிகரிக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட 2016-2017-ம் நிதி ஆண்டு முதல் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகி வருவது கவனிக்கத்தக்கது.
-
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications