Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க மீன் தேடி வருது.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 8-வது ஊதியக் குழுவின் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழு (8th Central Pay Commission) தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யக் காத்திருந்தவர்களுக்குக் கூடுதல் கால அவகாசத்தை வழங்கி அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு.

dearness allowance 8-

நீட்டிக்கப்பட்ட கெடு: மார்ச் 31 வரை டைம் இருக்கு!

8-வது ஊதியக் குழுவின் கேள்வித்தாளுக்குப் பதிலளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கான கடைசித் தேதி மார்ச் 16, 2026 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தேதியை மார்ச் 31, 2026 வரை நீட்டித்து ஊதியக் குழு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அமைச்சகங்கள், துறைகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அறிக்கையைத் தயார் செய்வதே இந்த அவகாச நீட்டிப்பின் நோக்கம்.

கேள்வித்தாளில் ஒளிந்திருக்கும் 'சம்பள' ரகசியங்கள்!

இந்த ஊதியக் குழு வெளியிட்டுள்ள கேள்வித்தாள் வெறும் காகிதமல்ல; அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கப்போகும் ஒரு வரைபடம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:

தனியார் Vs அரசு: தனியார் துறை ஊதியத்துடன் ஒப்பிட்டு அரசு ஊழியர்களின் சம்பளம் எப்படி இருக்க வேண்டும்?

பிரிவு வாரியான ஊதியம்: பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு அந்தந்தத் துறை சார்ந்த தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சம்பளம் வழங்கலாமா?

பென்ஷன் சுமை: தற்போது 50 லட்சம் ஊழியர்களுக்கு இணையாக 70 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இந்த நிதிச் சுமையைச் சமாளிப்பது எப்படி?

செயலாளர் சம்பளம்: மத்திய அரசின் உச்சபட்ச பதவியான 'செக்ரட்டரி' பதவியில் இருப்பவர்களுக்கு 'வேரியபிள் பே' (Variable Pay) முறையை அறிமுகப்படுத்தலாமா?

போனஸ் மாற்றம்: அனைவருக்கும் சமமான போனஸ் என்பதற்குப் பதிலாக, தனிநபர் திறமையின் அடிப்படையில் போனஸ் வழங்கலாமா?

ராணுவத்தினருக்கான முக்கியக் கேள்விகள்!

ரயில்வே, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் (CAPF) ஒட்டுமொத்த அரசு ஊழியர்களில் 70 சதவீதத்தைப் பங்களிக்கின்றனர். இவர்களுக்கான 'Military Service Pay' மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கலைப் பாதிக்கிறதா என்பது குறித்தும் ஊதியக் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

அரசுப் பணியில் நிலவும் சவால்கள், விலைவாசி உயர்வு, சம்பள உயர்வுக்கான 'பிட்மென்ட் ஃபேக்டர்' (Fitment Factor) போன்ற 18 முக்கியக் கேள்விகள் அடங்கிய பட்டியலுக்கு மார்ச் 31-க்குள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

அடுத்த 10 ஆண்டுகால மத்திய அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையைத் தீர்மானிக்கப்போகும் இந்த 'மெகா' கேள்வித்தாளுக்குக் கிடைக்கும் பதில்கள் தான், வருங்காலச் சம்பள உயர்வின் அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது மத்திய ஊதியக் குழு (CPC), தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காகப் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ள ஊதியக் குழு, ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத் திருத்தம் தொடர்பான தனது பரிந்துரைகளைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+