8-வது ஊதியக் குழு.. ரெடியான ₹75 லட்சம் முன்பணம்? மத்திய அரசு ஊழியர்களின் 'ஹவுசிங்' கனவு நிறைவேறுது
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) தனது பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஊழியர்கள் மத்தியில் ஒரு பெரிய 'பட்ஜெட்' எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. அதுதான் வீடுகட்டும் முன்பணம் (House Building Advance - HBA). நிலத்தின் விலை விண்ணைத் தொடும் இந்த காலத்தில், தங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க அரசு கைகொடுக்க வேண்டும் என்பதே ஊழியர்களின் தற்போதைய பிரதான கோரிக்கை.
மத்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் (FNPO) சமீபத்தில் வழங்கிய பரிந்துரையில், இந்த HBA வரம்பை அதிரடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

₹75 லட்சம்... 5% வட்டி: ஜாக்பாட் கிடைக்குமா?
தற்போதுள்ள 7-வது ஊதியக் குழுவின் விதிகள், இன்றைய ரியல் எஸ்டேட் விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவதாக ஊழியர்கள் உணர்கிறார்கள்.
"பழைய சம்பள விகிதம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, HBA விதிகளில் ஒரு 'மாஸ்டர் பிளான்' மாற்றம் தேவை" என்கிறது FNPO.
முக்கியப் பரிந்துரைகள் இதோ:
உச்ச வரம்பு: அதிகபட்ச முன்பணத்தை ₹75 லட்சமாக உயர்த்த வேண்டும் (அல்லது 60 மாத அடிப்படை ஊதியம்).
குறைந்த வட்டி: வீட்டுக்கடன் வட்டியை வெறும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன் மூலம் நடுத்தர வர்க்க ஊழியர்களின் மாதத் தவணை (EMI) சுமை பாதியாக குறையும்.
ஏன் இந்த அதிரடி டிமாண்ட்?
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: சென்னையில் ஒரு சாதாரண 2BHK பிளாட் வாங்க வேண்டுமென்றால் கூட, இன்று ₹60 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், தற்போதைய விதிகளின்படி ஒரு ஊழியருக்கு ₹25 லட்சம் மட்டுமே முன்பணமாகக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மீதித் தொகைக்கு அவர் தனியார் வங்கிகளில் 9% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டியில் கடன் வாங்க வேண்டியுள்ளது. இது ஊழியர்களைப் பெரும் கடன் வலையில் தள்ளுகிறது.
அரசு தரும் முன்பணம் ₹75 லட்சமாக உயர்ந்தால், ஊழியர்கள் நிம்மதியாகத் தங்கள் சொந்த வீட்டை அடைய முடியும். இது அரசுக்கும் நல்லது; ஊழியர்கள் அரசு குடியிருப்புகளை எதிர்பார்க்காமல் சொந்த வீடுகளுக்கு மாறும்போது, வீட்டு வசதி வாரியத்தின் மீதான அழுத்தம் குறையும்.
FNPO-வின் 'டாப் 10' கோரிக்கைகள்:
வெறும் பணத்தை மட்டும் கேட்காமல், நடைமுறைச் சிக்கல்களையும் அலசியுள்ளது ஊழியர் சங்கம்:
குறைந்த பணிக்காலம்: தற்போது 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கே HBA கிடைக்கிறது. இதை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
பழைய வீடுகளுக்கும் கடன்: புது வீடு கட்டுவது மட்டுமல்லாமல், ஏற்கெனவே கட்டப்பட்ட செகண்ட் ஹேண்ட் (Second-hand) வீடுகளை வாங்குவதற்கும் முன்பணம் வழங்கப்பட வேண்டும்.
புதுப்பித்தல் வசதி: ஏற்கெனவே உள்ள வீட்டைப் புதுப்பிக்க அல்லது விஸ்தரிக்க (Renovation) நிதி உதவி அளிக்க வேண்டும்.
முத்திரைத்தாள் கட்டணம்: அடமானப் பத்திரங்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவுச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் அல்லது திரும்ப வழங்க வேண்டும்.
பணி நிறைவுக்கால சலுகை: ஒரு ஊழியருக்குப் பணிக்காலம் குறைவாக இருந்தால், அவருடைய கிராஜுவிட்டி (Gratuity) தொகையை ஈடாகக் கொண்டு கடன் தகுதியைத் தீர்மானிக்க வேண்டும்.
அடுத்த 18 மாதங்கள்... காத்திருப்பில் ஊழியர்கள்!
8-வது ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கக் குறைந்தது 18 மாதங்கள் ஆகலாம். அதாவது, 2027-ன் இறுதிப் பகுதியில்தான் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்பது தெரியவரும். நிலம் விலை ஏறும் வேகத்திற்கு, சம்பளக் கமிஷன் 'வேகமாக' ஓடிவருமா என்பதுதான் ஊழியர்களின் மில்லியன் டாலர் கேள்வி!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications