ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பொறுப்பேற்பு.. கொலீஜியம் நடைமுறையில் முதல்முறை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 9 நீதிபதிகளை கொலீஜியம் பரிந்துரை செய்தது இதுவே முதல் முறையாகும்.

நீதிபதி என். வி. ரமணா தலைமையில் லலீத், கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோரை கொண்ட கொலீஜியம் குழுவானது உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும். இதையடுத்து பரிந்துரைத்த நீதிபதிகள் பொறுப்பேற்றுக் கொள்வர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை அடுத்து வேறு எந்த நியமனமும் நடைபெறவில்லை. அந்த வகையில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை கொலீஜியம் பரிந்துரை செய்து அதற்கு மத்திய அரசு ஒப்புதலும் அளித்துவிட்டது. ஒரே நேரத்தில் கொலீஜியத்தால் 9 பேர் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

யார் அந்த நீதிபதிகள்

யார் அந்த நீதிபதிகள்

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 24 ஆக உள்ளது. இந்த 9 பேர் பொறுப்பேற்றதை அடுத்து அந்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் அந்த 9 நீதிபதிகள் யார் என்பதை பார்ப்போம்.

  1. நீதிபதி ஏஎஸ் ஓகா
  2. நீதிபதி விக்ரம் நாத்
  3. நீதிபதி ஜே கே மகேஷ்வரி
  4. நீதிபதி ஹிமா கோலி
  5. நீதிபதி பிவி நாகர்த்தனா
  6. நீதிபதி சிடி ரவிக்குமார்
  7. நீதிபதி எம்எம் சுந்தரேஷ்
  8. நீதிபதி பெலா திரிவேதி
  9. நீதிபதி பிஎஸ் நரசிம்மா

இவர்களில் ஹிமா கோலி, பிவி நாகர்த்தனா, பெலா திரிவேதி ஆகியோர் பெண்களாவர். இனி இந்த 9 நீதிபதிகள் குறித்த சுய விவரங்களை சிறு குறிப்பாக பார்ப்போம்.

நீதிபதி ஏ.எஸ்.ஓகா

நீதிபதி ஏ.எஸ்.ஓகா

1. நீதிபதி ஏ.எஸ். ஓகா- இவரது முழு பெயர் அபே ஸ்ரீனிவாஸ் ஓகா. இவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியவர். இவர் சாதாரண குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது குறித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்க தவறியதே இல்லை. கொரோனா தொற்று காலத்தில் பேக்டரி தொழிலாளர்களின் பணி நேரத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களது ஊக்கத் தொகைகளை குறைப்பதற்கு ஓகா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிக்கையை கர்நாடகா அரசு திரும்ப பெற்றது.

நீதிபதி விக்ரம் நாத்

நீதிபதி விக்ரம் நாத்

2. நீதிபதி விக்ரம் நாத்- குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். அலகாபாத் நீதிமன்ற நீதிபதியும் ஆவார். பதவி மூப்பு அடிப்படையில் 2027 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் நியமிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவரது பதவிக்காலம் 7 மாதங்களாக இருக்கும்.

நீதிபதி ஜே.கே. மகேஷ்வரி

நீதிபதி ஜே.கே. மகேஷ்வரி

3. நீதிபதி ஜே கே மகேஷ்வரி- சிக்கிமி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இவர் ஏற்கெனவே ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்திருந்தார். மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியும் ஆவார். இவர் தனது பதவிக்காலத்தில் 4620 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது கொரோனா காலத்தில் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் இருப்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டவர். இவர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு வரை ஆகும்.

பெண் நீதிபதி ஹிமா கோலி

பெண் நீதிபதி ஹிமா கோலி

4. நீதிபதி ஹிமா கோலி- நீதிபதி ஹிமா கோலி 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்தார். பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்தார். தற்போது இவர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 2, 2024 ஆம் ஆண்டு வரை ஆகும்.

பெண் நீதிபதி பிவி நாகர்த்தனா

பெண் நீதிபதி பிவி நாகர்த்தனா

5. நீதிபதி பிவி நாகர்த்தனா- நீதிபதி பிவி நாகர்த்தனா- முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஈஎஸ் வெங்கட்ராமையாவின் மகளாவார். இவர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். வரும் 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகர்த்தனா இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும். இந்திய தலைமை நீதிபதி வரலாற்றில் இதுவரை அப்பதவியை பெண் அலங்கரிக்கவில்லை என்ற கவலை இவர் மூலம் நீங்கும். பதவி மூப்பு அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டாலும் அவர் இந்திய தலைமை நீதிபதியாக 36 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ. போப்டா, தனது ஓய்வின்போது, உச்ச நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி தலைமை ஏற்கும் காலம் வந்துவிட்டதாக கூறியிருந்தார். இதே போல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரமணாவும் கூறியிருந்தார்.

நீதிபதி சிடி ரவிக்குமார்

நீதிபதி சிடி ரவிக்குமார்

6. நீதிபதி சிடி ரவிக்குமார்- இவர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை ஆகும். இவர் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் மறைந்த பெற்றோர் குறித்து பேசிய போது கண்கலங்கினார். இவரது தந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்தவர். தாய், தந்தையின் ஆசியால் இன்று இந்த அளவுக்கு உயர்ந்ததாக நீதிபதி ரவிக்குமார் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

7. நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்- இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்ந்தார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் ஜூலை 21 ஆம் தேதி 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

நீதிபதி பிஎஸ் நரசிம்மா

நீதிபதி பிஎஸ் நரசிம்மா

9.மூத்த வழக்கறிஞர் பி எஸ் நரசிம்மா- இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர். அயோத்தியா வழக்கிற்காக சில கட்சிகளின் சார்பாக இவர் ஆஜராகியுள்ளார். இந்திய கிரிக்கெட் கவுன்சிலில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைக்க இவர் நடுநிலையாளராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். தற்போது இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில் இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+