லெஹங்கா உடை அணிந்து கொண்டு.. ஊரே திரண்டு வந்தோர் முன்னிலையில் மணப்பெண் செய்யும் காரியமா இது?
டெல்லி: கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என கேட்பதுண்டு. ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறே என்றெல்லாம் கடமையுணர்ச்சிக்கு காமெடியான எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
ஒருவர் ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால் வானமே இடிந்தாலும் அந்த பழக்கத்தை விடாமல் தினந்தோறும் கடைப்பிடிப்பர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான லட்சியங்களை நோக்கி பயணிப்பர்.
Recommended Video
அந்த வகையில் உடல் கட்டுகோப்பு என்பது பலரது லட்சியமாக இருக்கிறது. லேசாக உடல் எடை கூடிவிட்டாலும் வயிறு பெருத்துவிட்டாலும் ஏதோ இந்த உலகில் வாழ தகுதியே இல்லாதது போல் பலர் ஏளனம் செய்வதுண்டு.

பேச்சுகள்
இது போல் ஏசு பேச்சுகளை தடுக்க உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பர். மேலும் பலர் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். இதனால் தினமும் உணவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் செய்து வருவர். இந்த பழக்கத்தை அவர்கள் எந்த தேசத்திறகு சென்றாலும் எந்த சூழலிலும் கை விட மாட்டார்கள்.

சீரியஸ்
ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் இன்று சீரியஸாக உடற்பயிற்சி செய்கிறார்கள். கடந்த காலங்களில் சிலர் 4 நாட்களுக்கு உடற்பயிற்சியையும் நடைப்பயிற்சியையும் செய்வர். அடுத்த நாள் கை, கால் வலி என சாக்கு போக்கி சொல்லி வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவர். அத்தோடு ஃபிட்னஸ் எனும் லட்சியமும் போய்விடும்.

மார்கம்
ஆனால் மனமிருந்தால் மார்கமுண்டு என்பதற்கேற்ப மனது வைத்துவிட்டால் எந்த சூழலிலும் உடற்பயிற்சியை செய்துவிடுவர். அதற்கு உதாரணம் இணையதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ. ஆம் ! குருகிராமில் மணப்பெண் ஒருவர் லெஹங்கா உடையை அணிந்து கொண்டு தலை முதல் கால் வரை நிறைய அணிகலன்களை அணிந்து கொள்கிறார்கள்.

திருமணம்
அவரது திருமணத்தை காண நிறைய பேர் வருகை தருகிறார்கள். அந்த நேரம் பார்த்து மணப்பெண் மிகவும் பொறுப்பாக கீழே வந்து குப்புற படுக்கிறார். பார்ப்போருக்கு ஆச்சரியம், என்ன இது இந்த பெண் இப்படி செய்கிறாரே! ஒரு வேளை தூக்கம் வந்துவிட்டதோ என கருதுகிறார்கள். ஆளுக்கு ஒரு காரணங்களை அடுக்குகிறார்கள்.

தண்டால்
அதற்கு இடம் கொடுக்காத வகையில் அந்த பெண் தண்டால் எடுத்து தனது தினந்தோறும் உடற்பயிற்சியை மணமேடையில் செய்து முடிக்கிறார். அந்த லெஹங்கா உடை மிகவும் கனமாக இருக்கும். அந்த உடையில் அசால்ட்டாக இவர் தண்டால் எடுப்பதை பார்த்த உறவினர்கள் மூக்கு மேல் விரல் வைக்கிறார்கள்.
|
மணப்பெண்
பின்னர் தனது பைசப்ஸை எல்லாருக்கும் அந்த மணப்பெண் காணபிக்கிறார். இந்த வீடியோவிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் எத்தனை தடைகள் வந்தாலும் அதற்கான உழைப்பை செய்ய வேண்டும். அப்போதுதான் அறுவடை செய்ய முடியும். நல்ல வேளை மாப்பிள்ளையும் இவரை போல் சினியராக இருந்தால் ஓகே! இல்லாட்டி தினமும் என்ன கூத்து நடக்க போகிறதோ என உறவினர்கள் கிண்டல் அடித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications