குஜராத்தில் பாஜகவுக்கு காத்திருக்குது சவால்.. டிரம்ப் கார்டை களம் இறக்கிய ஆம் ஆத்மி? பரபர தகவல்!
அகமதாபாத்: குஜராத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த ராகவ் சாதா எம்பியை குஜராத்தில் களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி. இதனால் தற்போது குஜராத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
குஜராத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி தற்போது தனது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான போட்டியாக நாங்களே இருக்கிறோம் என்பதை வாக்காளர்களுக்கு காட்டும் வகையில் ஆம் ஆத்மியின் பணிகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்து உள்ளது.

தீவிர பிரசாரம்
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தன்னை முன்னிறுத்துவதற்கு குஜாரத் தேர்தலில் பெறும் வெற்றி முக்கிய பங்கு வகிக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்புகிறார். இதனால், குஜராத் தேர்தலில் எப்படியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட என்ற நோக்கத்தில் அடிக்கடி அங்கு செல்லும் கெஜ்ரிவால் மக்களை சந்தித்து, கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

எம்.பி ராகவ் சதா
இந்த நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதாவை களம் இறக்கியுள்ளது. ஏற்கனவே பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற அசத்தல் வெற்றிக்கு ராகவ் சாதாவும் முக்கிய காரணம் என்று அக்கட்சி வட்டாரம் சொல்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராகவ் சாதா வகுத்த யுக்திகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளும் அக்கட்சி பஞ்சாபில் 79 சதவீதம் பெரும்பான்மையுடன் வெற்றியை ருசிக்க காரனம் என்று சொல்லப்படுகிறது.

இளம் வாக்காளர்களுக்கு குறி
இளைஞர்கள் மத்தியில் ராகவ் சாதாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் இதனால், இளம் வாக்காளர்களை குறிவைத்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் ராகவ் சாதாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்த ஆம் ஆத்மி முடிவு செய்து இருக்கிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக இணைபொறுப்பாளாராக ராகவ் சாதாவை ஆம் ஆத்மி நியமித்துள்ளது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகவ் சாதாவின் அளப்பறிய பங்கை பாராட்டும் வகையில், அவருக்கு குஜராத்திலும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாஜகவுக்கு ஒரே மாற்று நாங்கள் தான்
அண்மையில் பேட்டி அளித்த ராகவ் சாதா, குஜராத்தில் பாஜக ஆட்சியை விரும்பாத வாக்களர்கள் பலர் இருக்கின்றன்றனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை. பாஜகவுக்கு ஒரே மாற்று நாங்கள் மட்டுமே இருப்பதால் அத்தகைய வாக்களர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான கட்சியாக ஆம் ஆத்மி வருவதற்கான நேரம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். பாஜகவை எதிர்கொள்ளும் துணிச்சல் எங்களுக்கு இருக்கிறது. ஆம் ஆத்மி பிரந்தியா கட்சி கிடையாது'' என்று பேசியிருந்தார்.

யார் இந்த ராகவ் சாதா
டெல்லியை சேர்ந்தவர் ராகவ் சதா. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற எம்.பியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications