Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு குழந்தையின் கையை சுற்றிய நாகப்பாம்பு.. கடைசியில் நடந்த யாருமே நம்ப முடியாத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் ஆகிய இந்த மூன்று விஷப்பாம்புகளை தான் அதிகம் பார்க்க முடியும். இதில் நாகப்பாம்பு சர்வ சாதாரணமாக இரை தேடி வெளியே செல்லும்.. அப்படி வெளியே சுற்றிய நாகம்பாம்பு ஒரு வயதுமுதல் ஒன்றரை வயது வரை உள்ள ஒரு குழந்தையின் அருகில் சென்றுள்ளது. ஆனால் அந்த குழந்தை பாம்புக்கு எமனாக மாறி உள்ளதாக சொல்கிறார்கள். அது எப்படி ஒரு வயது குழந்தையால் பாம்பை காலி செய்ய முடியும் இது நம்பமுடியாதது என்கிறார்கள் பலர்.

இந்தியாவில் நாகப்பாம்பு, கட்டுவிரியன் , கண்ணாடி விரியன் ஆகிய இந்த மூன்று விஷப்பாம்புகளை தான் அதிகம் பார்க்க முடியும். மிக அபூர்வமாக ராஜநாகத்தை பார்க்க முடியும். இந்த நான்கும் கடும் விஷம் கொண்ட பாம்புகள் ஆகும். ஆனால் இதில் ராஜநாகம் அவ்வளவு விரைவாக மனிதர்களை தாக்க விரும்பாது. ஆனால் அது கடித்தால் கண்டிப்பாக உயிர் பிழைப்பது கடினம்.

A cobra wrapped around a child s hand but An unbelievable twist at the end

மூன்று பாம்புகள்

பொதுவாகவே நாகம்பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் சர்வ சாதாரணமாக வெளியில் உலாவும். அதிலும் நாகப்பாம்பு வயல்வெளிகளில் அதனை ஒட்டிய வீடுகளில் வந்து செல்லும். நாகம்பாம்பில் கருநாகம், பூ நாகம், வெள்ளை நாகம் என பல்வேறு வடிவங்களில் இருக்கும் . நாகம்பாம்பு கடித்தால் விரைவில் அவரை மரணம் நெருங்கிவிடும். ஏனெனில் நாகப்பாம்பு நியூரோடாக்ஸிக் விஷம் கொண்ட பாம்பு ஆகும்.

நாகம்பாம்பு கடித்தால் என்னாகும்

இந்த பாம்பு கடித்தால் , சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்று விரைவாகவே மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக பாம்பு கடிதத அரை மணி நேரத்திற்குள் விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டால் உயிரைக் காப்பாற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அந்த அளவிற்கு நாகப்பாம்பு ஆபத்தானது. ஏனெனில் நாகம்பாம்பு எந்த அளவிற்கு கடிக்கும் போது விஷத்தை செலுத்துகிறதோ அதுவே ஒருவர் உயிர் பிழைப்பாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும். இப்படி நாகப்பாம்பு மிகவும் ஆபத்தானாக இருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட நாகம்பாம்பை பற்றி நம்ப முடியாத விஷயத்தை நடந்ததாக சொல்கிறார்கள். பீகார் மாநிலம் பெத்தியா கிராமத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் பற்றி மக்கள் சொல்லியது.. ஒரு வயது குழந்தை நாகப்பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டதாம். குழந்தை கோவிந்தா தன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நாகப்பாம்பு அவன் கையைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

பாம்பை கடித்த குழந்தை

பாம்பை ஒரு பொம்மை என்று நினைத்த குழந்தை, அதைக் கடித்தது. உடனடியாக பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அந்த கிராமத்து மக்கள் சொல்கிறாக்ள். அதே நேரத்தில் குழந்தை மயக்கமடைந்தது. அவனை உடனடியாக கிராம கிளினிக்கிற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.

கிராம மக்கள் நம்பிக்கை

பெத்தியா கிராம மக்கள், தன் அருகில் வித்தியாசமான ஒன்றைப் பார்த்த குழந்தை கோவிந்தா கோபமடைந்ததால் கடித்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள், குழந்தை அதை ஒரு பொம்மை என்று தவறாக நினைத்து கடித்துவிட்டது என்று கருதுகிறார்கள். ஒரு குழந்தையின் கடிக்கு நாகப்பாம்பு இறந்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது குழந்தையின் தாய் அருகில் வேலை செய்து கொண்டிருந்தாக கூறுகிறார்கள்.

பாம்பு கையைச் சுற்றியதும், குழந்தை அதைக் கடித்தது. அது உடனடியாக இறந்தது. கோவிந்தாவும் அதனால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தான். அவனது நிலை மோசமடைந்ததால், பெற்றோர் அவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC) அழைத்துச் சென்றுள்ளார்கள் என்றும். அங்குள்ள மருத்துவர் அவனை பெத்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (GMCH) அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது. குழந்தை சிகிச்சை பெற்று தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளானாம். அரசு மருத்துவர் திவாகாந்த் மிஸ்ரா, குழந்தைக்கு விஷம் ஏறியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்..


குழந்தையின் பாட்டி பேட்டி

குழந்தையின் பாட்டி மாதேஸ்வரி தேவி கூறுகையில், இரண்டு அடி நீள பாம்பு வந்தபோது அவனது தாய் விறகு சேகரித்துக் கொண்டிருந்தார். குழந்தை கோவிந்தா முதலில் பாம்பைத் தாக்கினான். பின்னர் கடித்து கொன்றான் என்று கூறியிருக்கிறார். ஆனால் குழந்தையை ஒரு வயது குழந்தை கடித்துக் கொன்றதாக பாட்டி கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. பாம்பு எப்படி இறந்தது என்பது யாருக்கும் தெரியாது. பாம்பு எதாச்சையாக இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் தவறாக பிரிந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. எது உண்மை என்பதை வனத்துறை அதிகாரிகள் சொன்னால் தான் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+