ரூ.5000க்கு மசாஜ் + 2000க்கு 'சிறப்பு சேவை'! தாய்லாந்து பெண்களை வைத்து விபச்சாரம்.. ஷாக்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் உட்பட 13 பெண்களை வைத்து மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ரிஷப் விஹார் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வந்திருக்கிறது. ஆனால் இந்த மசாஜ் சென்டரில் வழக்கத்திற்கு மாறாக ஆண்கள் அதிகமானோர் வந்து செல்வது அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனையடுத்து காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் மசாஜ் சென்டரை நோட்டமிட்ட காவல்துறையினருக்கு புகார் உண்மையானதுதான் என்று தெரியவந்துள்ளது.

புகார்
இதனையடுத்து ஷாஹ்தாரா மாவட்டத்தின் துணை போலீஸ் கமிஷனர் சத்திய சுந்தரம் ரகசிய திட்டத்தை தீட்டினார். இதன்படி நேற்று காலை ஒரு சாதாரண வேனில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்றனர். இந்த திட்டத்தில் காவல் ஆய்வாளர் ஹர்கேஷ் கபா, உதவி ஆய்வாளர்கள் பிரமோத், ராகுல், அவர்களுக்கு உதவியாக காவலர்கள் கரம்வீர், ராஜீவ் ராணா, பெண் தலைமை காவலர்கள் தீபிகா, பாருல், சோனம் ஆகியோர் களமிறங்கினர். இக்குழுவிலிருந்து மசாஜ் சென்டருக்கு மாறு வேடத்தில் காவலர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். இவரை வரவேற்பறையில் ராஜ்குமார் என்பவர் வரவேற்றிருக்கிறார். மசாஜ் செய்ய ரூ.5000 ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து காவலர் ராஜ்குமார் கேட்ட தொகையை கொடுத்துள்ளார்.

தகவல்
பின்னர் காவலரிடம் வந்து நைசாக, "சிறப்பு சேவை வேண்டுமெனில் மேற்கொண்டு ரூ.2,000 கொடுத்தால் போதும்" என்று கூறியுள்ளார். பின்னர் காவலரும் ரூ.2,000ஐ கொடுத்திருக்கிறார். இதனையடுத்து உள்ளே சென்றபோது அங்கு தாய்லாந்தை சேர்ந்த பெண்கள் இருந்துள்ளனர். மசாஜ் தொடங்கியுள்ளது. அப்போது, "மேற்கொண்டு ரூ.3,000 கொடுத்தால் விருப்பப்படி நடந்துகொள்ளலாம்" என்று அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து வெளியில் இருந்த காவல் துறையினருக்கு இவர் ரகசிய தகவல் கொடுக்கவே, முழு படையும் உள்ளே நுழைந்துள்ளது.

சிறுமிகள்
இதில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களில் 7 பேர் தாய்லாந்ததை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்களுடன் 5 இந்திய பெண்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 13 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதற்காக ராஜ்குமார் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம்பெண்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
அதேபோல "இந்த மசாஜ் சென்டரின் பின்னணியில் யார்? யாரெல்லாம்? இயங்கி வருகிறார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மசாஜ் சென்டர் வேறு ஒருவரின் பெயரில் இயங்கி வருகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் என்பவர் வெறும் பணியாளர்தான். இந்த மசாஜ் சென்டருக்கு வேறு எங்காவது கிளைகள் இருக்கிறதா? இதை தொடங்குவதற்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது? அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறதா? என்கிற கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
