சிறுத்தைகள் ஜாக்கிரதை.. அலர்ட் செய்த இலங்கை வனத்துறை.. போர்டு கிட்டயே நிக்குதே.. என்னா பர்பெக்ட்
டெல்லி: சிறுத்தைகள் ஜாக்கிரதை என்ற பெயர் பலகையில் எச்சரித்துள்ள நிலையில் அந்த பலகையின் தூண்களுக்கு கீழே ஒரு சிறுத்தை நிற்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வனங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சில இடங்களில் மனிதர்கள் செல்லும் சாலைகளிலேயே யானை, காட்டெருமை, சிறுத்தை, சிங்கம், புலி உள்ளிட்டவை பயணிக்கும்.

ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்லும். இவை பெரும்பாலும் காடுகளில் உணவு, நீர் இல்லாமல் போனால் அவை ஊருக்குள் உணவு, நீரை தேடி வரும். அவ்வாறு வரும் போது கொடிய மிருகங்களிடம் சிக்கினால் அவ்வளவுதான்.
இந்த விலங்குகள் நடமாடும் பகுதி குறித்து உள்ளூர் மக்களுக்கு நன்ராக தெரியும். இதனால் அவர்கள் உஷாராக இருப்பர். ஆனால் வெளியூர் மக்களுக்கு அந்த வன விலங்குகள் சாலைகளில் திரிவது குறித்து தெரியாமல் இருக்கும். இதனால் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைப்பர்.
நீர் நிலைகளாக இருந்தால் அந்த பகுதியில் நிறைய முதலைகளும் திமிங்கலங்களும் இருப்பதாக இருந்தால் அவை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்படும். இதற்காக பலகைகள் வைப்பர். அந்த வகையில்தான் இலங்கையில் ஓட்டன் சமவெளி தேசிய வனம் என்பது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
இது ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 7000 அடி உயரமானது. 1969 ஆம் ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. இங்கு பசுமை மாறாக காடுகள் உள்ளன. இலங்கையில் மிக உயரமான வனங்கள் இதுதான்.
இங்கு 4000 சாம்பர் மான்கள் உள்ளன. இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப்பூனைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்கு பேக்கர்ஸ் நீர் வீழ்ச்சியும் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். அவ்வாறு வருவோர் காட்டு விலங்குகளிடம் சிக்காமல் இருக்க ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒரு இடத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருங்கள், எப்போதும் கவனமுடன் செல்லுங்கள் என அறிவிப்பு பலகை உள்ளது. அதில் ஒரு சிறுத்தையின் புகைப்படமும் உள்ளது. ஒரு முறை அந்த அறிவிப்பு பலகைக்கு கீழேயே ஒரு சிறுத்தை இருக்கும் புகைப்படம் யார் எடுத்தது என தெரியவில்லை.
ஆனால் வைரலாகி வருகிறது. இதை விட சிறந்த முறையில் யாராலும் அறிவிப்பு பலகைகளை வைக்க முடியுமா என்ன என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications