கௌம்புன கொஞ்ச நேரத்திலேயே ஏழரையை கூட்டிய பயணி! நடுவானில் டிஷ்யூம் டிஷ்யூம்.. கடைசியில் நடந்த சம்பவம்
டெல்லி: டெல்லியிலிருந்து இன்று காலை லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்கு திரும்பியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஒரு சில விமான பயணிகளின் செயல்பாடுகள் ஒட்டு மொத்த விமான பயணிகளுக்கும் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கிறது. பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் மீது சிறுநீர் கழிப்பது, பணிப்பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது என விமான பயணிகளின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விமானம் இயக்க தொடங்கிய காலம் முதல் 'இதையெல்லாம்' செய்ய தடை விதிக்கப்படுகிறது என விமான நிறுவனங்கள் சில விஷயங்களை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது.

ஆனால் பயணிகள் சிலர் இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் இஷ்டம் போல ஆட்டம் போடுவதும், கடைசியில் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்படி இருக்கையில்தான் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதாவது டெல்லியிலிருந்து லண்டனுக்கு இன்று காலை 6.35க்கு ஏர் இந்தியாவின் AI 111 விமானம் புறப்பட்டிருக்கிறது. புறப்படுவதற்கு முன்னர் விமானத்தின் அனைத்து பாகங்களையும் செக் செய்வதை போல பயணிகளையும் செக் செய்தே அனுமதித்திருக்கிறார்கள்.
எல்லாம் ஓகே! சரியான நேரத்திற்கு திட்டமிட்டவாறு விமானம் புறப்பட்டது. விமானம் கொஞ்சம் கொஞ்சமாக 30,000 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. ஹரியானா, பஞ்சாப் தாண்டி லாகூர் அருகே சென்றபோது பஞ்சாயத்து தொடங்கியது. அதாவது, குறிப்பிட்ட ஒரேயொரு பயணி மட்டும் பக்கத்தில் இருந்த சக பயணிகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். தொடக்கத்தில் இது வார்த்தை சண்டையாகதான் இருந்தது. எனவே பணிப்பெண்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பயணி சமாதானம் ஆகவில்லை.
மட்டுமல்லாது பணிப்பெண்ணை அந்த இடத்திலிருந்து விலகி போகுமாறும் கேட்டுக்கொண்டார். அப்பெண் அந்த இடத்திலிருந்து விலகி சென்றதும் பக்கத்திலிருந்து பயணியை இவர் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். மற்ற பயணிகள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர் சண்டையை விடவில்லை. எனவே நிலைமை கையை மீறி போவதை பணிப்பெண் விமானியிடம் கூற விமான சரி திரும்பி டெல்லிக்கே போய்விடுவோம் என்று விமானத்தை திருப்பியுள்ளார். ஆனால் அதற்குள் விமானம் ஆப்கானிஸ்தானின் காபூல் வரை வந்துவிட்டது.

இருந்தால் என்ன? இந்த பயணியை வைத்துக்கொண்டு உருப்படியாக லண்டன் போய் சேர முடியாது என முடிவெடுத்த விமானத்தின் கேப்டன் உடனடியாக டெல்லியில் விமானத்தை தரையிறக்கினார். விமானம் தரையிறங்கிய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகளிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார். விமானத்தில் சண்டையிடுவது, சக பயணிகளை தொந்தரவு செய்வது, விதிமுறைகளை மீறி நடந்துக்கொள்வது என பல புகார்களை ஏர் இந்தியா நிறுவனம் இவர் மீது கொடுத்திருக்கிறது.
இதுபோன்ற விவகாரங்களில் ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனம் நிறைய 'பல்புகளை' வாங்கியிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விமானத்தின் காலி இருக்கையில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்திருக்கிறார். ஆனால் அங்கு வேறு ஒருவரின் ஜாக்கெட் இருந்திருக்கிறது. இது தொடர்பாக ஏர் இந்தியா புகார் எதையும் கொடுக்கவில்லை. எனவே குற்றவாளிக்கு ஆதரவாக இருந்ததாக கூறி இந்நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சத்தை விமான போக்குவரத்து ஆணையரகம் அபராதமாக விதித்திருக்கிறது.
இதேபோல பாரிஸிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த மூதாட்டி மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த முறையும் இதுபோன்று 'ஃபைன்' வாங்கிவிட கூடாது என உஷாராக ஏர் இந்தியா நிறுவனம் சம்பந்தப்பட்ட பயணியை கீழே இறக்கிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications