வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புதிய புயல் உருவெடுக்குமா?
டெல்லி: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்க கடலின் வடமேற்கு பகுதி, ஒடிஷா- மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு ஒடிஷாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வங்க கடலில் புதிய புயலாக உருவெடுக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும் என்கின்றனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.
டெல்லி, மும்பையில்..: 62 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லி, மும்பையில் ஒரே நேரத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து கொட்டிக் கொண்டிருக்கிறது. 1961-ம் ஆண்டு ஜூன் 21-ல் டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நேரத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. அதேபோன்ற நிலைமை தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறது.
பொதுவாக டெல்லியில் பருவமழை ஜூன் 27-ல் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 2 நாட்களுக்கு முன்னதாக பருவமழை தொடங்கிவிட்டது. மத்திய பிரதேசம், உ.பி. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹரியானா, குஜராத். ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் பருவமழை தொடங்கி இருக்கிறது. நாட்டில் தென்மேற்கு பருவமழை தொய்வின்றி பெய்து வருவதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபிக் கடல்: அரபிக் கடலில் அண்மையில் உருவான புயல், அதனைத் தொடர்ந்து கேரளா உள்ளிட்ட அரபிக் கடலோர மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்தது. அரபிக் கடல் புயலால் தென்மேற்கு பருவமழை அரபி கடலோர மாநிலங்களில் சற்று தாமதமாகவே தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications