Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறான முத்தலாக் முறைக்கு தடை.. பாலின சமத்துவத்தில் மைல்கல்.. குடியரசுத் தலைவர் பெருமிதம்

சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்

    டெல்லி: சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

    இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    A milestone in the quest for gender justice, says President Govin on Triple Talaq bill

    லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அனுமதி உடன் அவசர சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தது. இரண்டு முறை இது அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்தது.

    கடைசியில் தற்போது வெற்றிகரமாக இந்த மசோதா இரண்டு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகி உள்ளது. இதுகுறித்து தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.

    அதில், இஸ்லாமியா பெண்கள் மசோதா (முத்தலாக் மசோதா) ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு, சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தில் இது ஒரு மைல்கல். மொத்த நாட்டிற்கும் இது திருப்திகரமான தருணம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+