டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக நுபுர் சர்மா சொன்னது தப்பில்ல..! நெதர்லாந்திலிருந்து பறந்து வந்த சப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளராக ஒருந்த நுபுர் சர்மா இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்கள் விமர்சனங்களை சந்தித்தது. கத்தார், ஈரான், சவுதி என்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்! இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்!

சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை கடுமையாக இகழ்ந்து இருந்தார். இவரின் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் மகாராஷ்டிராவில் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

நுபுர் சர்மா

நுபுர் சர்மா

இதையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து கத்தார் சார்பாக இந்தியாவிற்கு இதில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டது. நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுத்து மகிழ்ச்சி. ஆனால் இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பிலும், அது அரசின் அதிகாரபூர்வ கருத்து கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

உண்மைதான்

உண்மைதான்

அவர் தனது கருத்தில், இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகள் இந்திய அரசியல்வாதி நுபுர் சர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் சர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். நபிகள் நாயகம் ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு ஏன் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக இல்லை. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை மோசமாக நடத்துவார்கள். அதோடு, சிறுபான்மையினரை கொன்று, மனித உரிமைகளை மீறுவார்கள். நபிகள் நாயகத்தின் கருத்துக்கள் என்பது புண்படுத்தும் குணம் கொண்டது மற்றும் தவறானது. அது ஹீரோயிச கருத்துக்கள் அல்லது. இந்த நயவஞ்சகர்கள் எதிர்ப்பை கண்டுகொள்ளாதீர்கள். இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை. அவர்களுக்கு என்று சட்டம் இல்லை. அங்கு சுதந்திரம் இல்லை. அவர்கள்தான் விமர்சிக்கப்பட்ட வேண்டும், என்று நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து எம்பி

நெதர்லாந்து எம்பி

இன்னொரு ட்விட்டில், இஸ்லாமிய நாடுகளை சமாதானம் செய்வது வேலைக்கு ஆகாது. அது இன்னும் பிரச்னையை பெரிதாக்கும். எனவே இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்களே.. இஸ்லாமிய நாடுகளால் அச்சம் அடைய வேண்டாம்.உங்கள் அரசியல் வாதி நுபுர் சர்மாவை காப்பதில் உறுதியாக இருங்கள். அவர் நபிகள் நாயகம் பற்றி உண்மையை பேசி இருக்கிறார். உங்கள் சுதந்திரத்திற்காக நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், என்று இந்தியாவிற்கு நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.

English summary
A Netherland MP supports Nupur Sharma's comment on Prophet Nabi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X