குஜராத்: மத்திய பாஜக அரசு தந்த ரூ608 கோடி அம்போ- ஆசியன் கேம்ஸில் வாங்கியது "முட்டை"- தமிழகத்துக்கு?
டெல்லி: இந்திய மாநிலங்களிலேயே குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களைவிட இரு மடங்காக குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு விளையாட்டுத் துறைக்கு கொடுத்த நிதி ரூ608 கோடி. ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குஜராத் மாநிலம் ஒரு பதக்கத்தை கூட வாங்கவில்லை என்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை சரித்திரம் பேசும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தியது. மிகவும் குறுகிய காலத்திலேயே மத்திய அரசின் வெறும் ரூ33 கோடி நிதி உதவியை வைத்துக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகம் புகழும் வகையில் அசால்ட்டாக நடத்தியது தமிழ்நாடு அரசு.

அப்போது மாநிலங்களுக்கான மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அத்துடன் இந்தியாவிலேயே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசானது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதியை வாரி வாரி கொடுத்ததும் அம்பலமானது.
குஜராத்துக்கு தாராளம்: உதாரணமாக குஜராத் மாநில அரசுக்கு ரூ608 கோடி நிதியை மத்திய அரசு கொடுத்தது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ503 கோடி கொடுத்தது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ183 கோடி கொடுத்தது. இன்னொரு வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமுக்கு கூட ரூ47.68 கோடி கொடுத்தது மத்திய அரசு.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ33 கோடியைத்தான் மத்திய அரசு கொடுத்தது. மிசோரம் மாநிலத்துக்கு ரூ39 கோடி; நாகாலாந்து மாநிலத்துக்கு ரூ45 கோடி கொடுத்தது. இந்த குட்டி மாநிலங்களைவிட சொற்ப தொகையைத்தான் தமிழ்நாட்டு கொடுத்தது மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு கொடுத்த ரூ33 கோடி எங்கே? குஜராத்துக்கும் உ.பி.க்கும் கொடுத்த ரூ608, ரூ503 கோடி எங்கே? என்பதுதான் அப்போது எழுப்பப்பட்ட கேள்வி.
Although they got highest fund's from centre but still finished at 0.
— Youth Against Hate (@YouthAgnstHate) October 11, 2023
Haryana needs to be given more funds, our medal tally will have more medals if harayana would be given enough funds pic.twitter.com/FIjeyrODAX
சாதித்த பாரத வீரர்கள்: இந்த விவகாரம் இப்போது மீண்டும் கிளம்பியுள்ளது. அதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையை நமது இந்தியா படைத்துள்ளது. முதல் முறையாக 107 பதக்கங்களை நமது இந்திய வீரர்கள் அள்ளிக் குவித்தனர். இது ஒரு இந்தியராக நமக்குப் பெருமைதான். அதில் துளியும் சந்தேகம் இல்லை.
Remember, medal winners are medalists here.
— Amock (@Politics_2022_) October 11, 2023
And medals ≠ medalists,
There should be no confusion.👍 pic.twitter.com/0D6WOg7h9Q
ஹரியானா, தமிழ்நாடு நிதியும் பதக்கங்களும்: அதேநேரத்தில் மத்திய பாஜக கொட்டி கொட்டி கொடுத்த மாநிலங்கள், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தலான சாதனைகளை படைத்துள்ளனவா? ஹரியானா மாநிலம்தான் அதிகமாக 44 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் ஹரியானா மாநிலத்துக்கு மத்திய பாஜக அரசு கொடுத்த நிதி ரூ88.89 கோடி. வெறும் ரூ33 கோடி மட்டுமே கொடுத்த தமிழ்நாட்டு வீரர்கள் பெற்ற பதக்கங்கள் எண்ணிக்கை 17.
குஜராத் நிதியும் பதக்க பட்டியலும்: அப்படியானால் இந்தியாவிலேயே மிக மிக அதிக அளவில் தமிழ்நாடு, ஹரியானாவை விட பல மடங்கு நிதி உதவியை மத்திய பாஜக அரசிடம் பெற்ற குஜராத் மாநிலம் அதாவது ரூ608 கோடி நிதி உதவி பெற்ற குஜராத் மாநிலம் எத்தனை பதக்கங்கள் வாங்கி இருக்கிறது தெரியுமா? அதுதான் குஜராத் மாடல் என சரித்திரத்தின் பக்கங்கள் பேசப் போகிறது.. ஆம் குஜராத் மாநில விளையாட்டு வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கத்தின் எண்ணிக்கை பூஜ்யம். ரூ608 கோடி நிதி உதவி பெற்ற குஜராத் மாநிலம் ஒரே ஒரு பத்தக்கத்தை கூட இந்திய தேசத்துக்காக பெற்றுத் தரவில்லை.. அப்படியானால் அந்த நிதி என்ன ஆனது? என்கிற கேள்வியுடன் அனல் பறக்க விவாதிக்கிறது சமூக வலைதளம் சூழ் உலகு!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications