'ஆர்டர் செய்தது லேப்டாப்'.. 'வந்தது சோப்பு கட்டிகள்'.. கொதித்தெழுந்த நபர்.. என்னாச்சு
டெல்லி: பிளிப்கார்டில் ஆன்லைன் மூலம் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு சோப்புக்கட்டிகள் டெலிவரி செய்யப்பட்டதால் அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடை வீதிகளுக்கு சென்று நமக்கு பிடித்த பொருட்களை நேரடியாக பார்த்து பார்த்து வாங்கிய காலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது.
இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடி, வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து விட்டு வீட்டு வாசலிலேயே பெறும் வசதியை ஆன்லைன் வணிக நிறுவனங்கள் வழங்குகின்றன.

வீட்டில் இருந்தபடியே
கடை வீதிகளுக்கு போய் வாங்குவதை விட இதில் வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும் என்பதால் சவுகரியம் கருதி ஆன்லைன் மூலம் பலரும் ஆர்டர்கள் செய்து வருகின்றனர். இதனால், உலக வர்த்தக சந்தையில் ஆன்லைன் வணிகம் பல பில்லியன் வருவாய் ஈட்டும் துறையாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு தற்போது ஆன்லைன் வணிகம் ஆக்டோபஸ் போல உலகமெங்கும் பரவி வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் எத்தனையோ சவுகரியங்கள் இருந்தாலும் இதில் பல ரிஸ்க்குகளும் இல்லாமல் இல்லை.

பொம்மை கார்
ஏனென்றால் செல்போனை ஆர்டர் செய்தால் செங்கல் வருவதாகவும், டிரோன் கேமரா ஆர்டர் செய்தால் பொம்மை கார் வருவதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி இருப்பதை கேள்வி பட்டு இருப்போம். இதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது. பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற பெயரில் ஆஃபர்களை ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தற்போது அள்ளிவிட்டுள்ளன. இதனால், பலரும் முண்டியடித்துக்கொண்டு ஆன்லைனில் தங்களுக்கு தேவையன பொருட்களை ஆர்டர் செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

லேப்டாப் ஆர்டர்
ஏன் நம்மில் பலரே ஆர்டர் கூட செய்து இருக்கலாம். இப்படித்தான் யஷ்ஹஸ்வி ஷர்மா என்ற நபர் ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்தது என்னமோ துணிதுவைக்க பயன்படுத்தப்படும் சோப்பு வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த யஷ்ஹஸ்வி ஷர்மா தனக்கு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து லிங்ட் இன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

போதிய விவரம் கிடையாது
எனது தந்தைக்காக பிக் பில்லியன் டேஸ் சேல் ஆஃபரில் நான் லேப்டாப் ஆர்டர் செய்தேன். ஆன்லைனில் டெலிவரி செய்யும் பொருட்களை ஓடிபி சொல்லி வாங்குவதில் எனது தந்தைக்கு அதிக பழக்கம் இல்லை. அதாவது, பார்சலை பிரித்து பார்த்து லேப்டாப்பை ஆய்வு செய்த பிறகே ஓடிபியை டெலிவரி செய்யும் நபரிடம் சொல்லும் அளவுக்கு எனது தந்தைக்கு இதில் போதிய விவரம் கிடையாது. பொருட்களை வாங்குவதற்காகத்தான் ஓடிபியை கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்து இருக்கிறார்.

வெறும் சோப்பு துண்டுகளே இருந்தன
வழக்கம் போல முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டதால், பார்சலை பெறும் போது ஓடிபியை சொல்லிவிட்டார். இதையடுத்து பிரித்து பார்த்தால் உள்ளே லேப்டாப் இல்லை. அதற்கு பதிலாக வெறும் சோப்பு துண்டுகளே இருந்தன. இது குறித்து அறிந்த நான் பிளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட் சர்வீசை தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த வகையிலும் திருப்பி தரமாட்டோம் என சொல்லிவிட்டனர். இத்தனைக்கும் என்னிடம் பார்சலை பிரிக்காமலே ஓடிபியை டெலிவரி செய்த நபர் பெற்றுக்கொண்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு என்னிடம் இருந்தது.

டிரெண்ட்
ஆனாலும் பார்சலை பரிசோதிக்காமல் ஓடிபியை வழங்கியது உங்கள் தந்தையின் தவறு.. எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் எங்களின் இறுதி நிலைப்பாடு இதுவே எனவும் திட்டவட்டமாக கூறியதாகவும் தனது பதிவில் கூறியிருக்கிறார். மேலும், ஓடிபியை பார்சலை பரிசோதித்த பிறகே கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை டெலிவரி செய்த நபர் ஏன் சொல்லவில்லை எனவும் யஷ்ஹஸ்வி சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications