Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்.. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 1927ம் ஆண்டு நாடாளுமன்றம் கட்டப்பட்டது. பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கமும் செய்யப்பட்டது. ஆனாலும், இதில் இடப்பற்றாக்குறை நீடித்து வருவதால் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

A petition was filed in the Supreme Court that the new Parliament building should be inaugurated by the President

இதனையடுத்து திட்டமிட்டவாறு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசு தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த புதிய கட்டிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.

இதனை எதிரக்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மட்டுமல்லாது இந்த கட்டிட திறப்பு விழாவில் தாங்களும் பங்கெடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் கூறுகையில், "நாடாளுமன்றம் என்பது பேறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நடத்த பிரதமர் முயல்கிறார். எனவே இதனால் இந்த கட்டிட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி,

"கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டார். இது குடியரசுத் தலைவரின் அரசியலமைப்புச் சட்டப்படியான பங்களிப்பதை நிராகரிப்பதாகும். எனவே இப்போதாவது நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிகழ்வுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்பட வேண்டும்" என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படியாக காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக என 19 கட்சிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், இந்திய அரசியல் 79ன் கீழ் நாடாளுமன்ற அவைகளை கூட்டுவதற்கும், ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோர் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். அதேபோல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாக்கப்படும். இப்படி இருக்கையில், குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெய் சுகேன் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம் கோடை விடுமுறையில் செல்ல இருப்பதால், நாளை ஒருநாள் மட்டும்தான் செயல்படும். எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கெனவே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தள்ள நிலையில், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மனுவாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்ற திறப்பு குறித்து செய்தியாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி தந்திருந்தார்.. அதில், பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். முன்பு குடியரசுத் தலைவர் விமர்சித்தவர்கள் தான் இப்போது அவரைக் கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+