"ஒரு ரகுமான் சாங்".. மத்திய அமைச்சர் ரவிசங்கரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ஏன்?.. பரபர பின்னணி
டெல்லி: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு லாக் செய்யப்பட்டதற்கு பின் அவர் பயன்படுத்திய ஏ.ஆர் ரகுமான் பாடல் ஒன்றுதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நேற்று ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த் தனது கணக்கை இன்று திறந்த போது, என்னுடைய கணக்கில் இன்று நான் லாக் இன் செய்த போது என்னால் உள்ளே செல்ல முடியவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத்திற்கு அளித்த விளக்கத்தில், உங்களின் ட்விட்டர் கணக்கு காப்பிரைட் புகார் காரணமாக லாக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியது.

புகார்
மேலும் உங்கள் ட்விட்டில் காப்பிரைட் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் லாக் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செய்த காப்பிரைட் ட்விட்டை நீக்கிவிடுவோம். இதேபோன்ற காப்பிரைட் முறைகேடு, அத்துமீறல் தொடர்ந்தால் உங்களின் கணக்கு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து அமைச்சரின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொங்கியது.

கண்டிப்பு
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்து இருக்கிறார். அவர் கூ செயலியில் செய்த போஸ்டில், தகுந்த முன்னறிவிப்பு இன்றி என்னுடைய கணக்கை ட்விட்டர் நிறுவனம் லாக் செய்தது இந்திய ஐடி விதிகளுக்கு எதிரானது. ட்விட்டர் நிறுவனத்தின் தன்னிச்சையான போக்கிற்கு எதிரான நான் அளித்த பேட்டிகளை பகிர்ந்த காரணத்தால் ட்விட்டர் நிறுவனம் என் கணக்கை லாக் செய்துள்ளது. டிவி பேட்டிகளை பகிர்ந்த காரணத்தால் என் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் வைத்து இருந்தார்.

கணக்கு
இந்த நிலையில் இவரின் கணக்கு ஒரு மணி நேரம் லாக் செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்றும் விவரம் வெளியாகி உள்ளது. இவரின் ட்விட் ஒன்றில் காப்பிரைட் கிளைம் செய்யப்பட்டதுதான் கணக்கு லாக் செய்யப்பட காரணம் என்று ட்விட்டர் நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரபல டேட்டா தளமான லுமென் டேட்டாபேஸ் தளம் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

ரகுமான்
அதன்படி, ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு லாக் செய்யப்பட்டதற்கு பின் அவர் பயன்படுத்திய ஏ.ஆர் ரகுமான் பாடல் ஒன்றுதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகுமானின் மா துஜே சலாம் (தாய் மண்ணே வணக்கம்) பாடல் உள்ள வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயன்படுத்தி உள்ளார். இது காப்பிரைட் உள்ள வீடியோ.

புகார்
கடந்த 2017ல் இவர் இந்த வீடியோவை பயன்படுத்தினாலும், கடந்த 2021 மே 24ம் தேதிதான் இந்த பாடலில் காப்பிரைட்டை வைத்து இருக்கும் சோனி நிறுவனம் இதை கண்டுபிடித்துள்ளது. International Federation of the Phonographic நிறுவனம்தான் சோனி நிறுவனத்திற்கான காப்பிரைட் கிளைம்களை செய்து வருகிறது.

முடக்கம்
இந்த நிலையில், International Federation of the Phonographic நிறுவனம் இந்த பாடல் காப்பிரைட் தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திடம் ஜூன் 25ம் தேதி புகார் அளித்த நிலையில், நேற்று அந்த வீடியோவை நீக்குவதற்காக ரவி சங்கர் பிரசாத்தின் கணக்கு முடக்கப்பட்டது. இந்த வீடியோவை நீக்கிய பின் மீண்டும் டிவிட்டர் கணக்கு செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மோதல்
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் நிறுவனம் ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசு சட்ட பாதுகாப்பை விலக்கிக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications