டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேய்களா.. இதெல்லாம் பார்த்தா கொரோனா வைரஸ் சூசைட் பண்ணிக்கும் போலயே.. என்னா ட்ரிக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: என்னதான் மக்களுக்கு நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை என்பதற்கு இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள வீடியோதான் ஆதாரம்.

கொரோனா நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் பெரும்பாலும் 4 அல்லது 5 ஆவது வாரத்தில்தான் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலகட்டத்தில் நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

வீட்டுக்கு வெளியே

வீட்டுக்கு வெளியே

தற்போது இந்தியா அபாய கட்டமான 3 ஆவது நிலைக்கு முந்தைய நிலையில்தான் இருக்கிறது. இது அபாய கட்டத்தை எட்டுவதை தடுக்க சமூக பரவலை தடுக்க வேண்டும். சமூக விலகலை அதிகரிக்க வேண்டும். இதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார். இதையடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

காவல் பணி

காவல் பணி

எனினும் பால் வேன், தண்ணீர் லாரி, காய்கறி வண்டி, மருந்து வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அது போல் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரின் வாகனங்களும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே ஏராளமான போலீஸார் காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தடியடி

தடியடி

அவர்கள் இது போல் காரணமில்லாமல் வருவோரை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுகின்றனர். சில இடங்களில் போலீஸார் அறிவுரை கூறி அனுப்புகின்றனர். சில இடங்களில் போலீஸார் தோப்புக் கரணம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கி அனுப்பி வைக்கின்றனர். இன்னும் சில இடங்களில் தடியடியும் நடத்தப்படுகிறது.

வாகன ஓட்டுநர்

வாகன ஓட்டுநர்

போலீஸாரின் இந்த கடும் கட்டுப்பாடுகள் எல்லாம் நம் நாட்டு மக்களின் நன்மைக்காக என்பதை சிலர் உணருவதே இல்லை. அப்படி ஒரு சம்பவத்தை உணர்த்துகிறது ஒரு வீடியோ. அதாவது பால், தண்ணீர் வண்டிகளுக்கு அனுமதி என்பதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள் சில இளைஞர்கள். இதற்கு அந்த வாகனத்தின் ஓட்டுநரும் இதற்கு உடந்தை.

திருட்டுத்தனம்

எந்த ஊர் என தெரியவில்லை. ஆனால் வடமாநிலம் போல் உள்ளது. ஒரு பால் அல்லது தண்ணீர் வண்டி போன்ற வண்டி ஓரிடத்தில் நிற்கிறது. அந்த வண்டியின் உள்ளே இருந்து 10 பேர் வெளியே வருகிறார்கள். அதாவது போலீஸ் கெடுப்பிடியை தவிர்க்க இது போன்ற திருட்டுத்தனத்தை செய்துள்ளனர். மக்களின் நலனுக்காகவே அரசு சில நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் மக்களோ அரசை ஏமாற்றுகிறோம் என நினைத்துக் கொண்டு அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

English summary
A milk or water van carries lot of people by cheating police who are imposing restrictions in nation wide curfew.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X