பசிபிக் கடல் அலையில் வாட்டர் பர்த் முறை மூலம் குழந்தை பெற்ற பெண்.. சமூகவலைதளங்களில் டிரென்டிங்!
டெல்லி: தண்ணீருக்கடியில் பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டை சேர்ந்தவர் ஜோஷி பியூகெர்ட் (37). ஜெர்மனியிலிருந்து குடியேறிய இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவதாக கருத்தரித்த ஜோஷி, கர்ப்ப காலத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வதையே முழுமையாக நிராகரித்திருந்தார். இலவச பிரசவம் என்று அழைக்கப்படும் முறையில் மருத்துவ உதவியின்றி தனது குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார்.

வாட்டர் பாத்
அதிலும் வாட்டர் பர்த் என சொல்லப்படும் நீர் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்தார். இதற்காக அவர் வசிக்கும் இடத்தில் உள்ள பசிபிக் கடலில் அலைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தார். இந்த இடம் குழந்தை பெற்றுக் கொள்ள பாதுகாப்பானதா என்பதையும் அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பிரசவ வலி
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி பிரசவ வலி வர போவதை உணர்ந்தார். இதையடுத்து தனது இரு குழந்தைகளை நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு தனது கணவருடன் பிரசவத்திற்கு தேவையான துண்டு, குழந்தைக்கான உடைகள், தொப்புள் கொடியை எடுக்கும் சல்லடை உள்ளிட்டவைகளுடன் கடற்கரைக்கு சென்றார்.

அலைகளுக்கு மத்தியில் குழந்தை
அங்கு அலைகளுக்கு மத்தியில் அமர்ந்தார். பிரசவ வலி எடுக்கும் போது நன்கு வாயை திறந்து மூச்சை விட்டார். பின்னர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுத்தார். அந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருக்கிறது. நல்ல எடையுடன் பிறந்தது.

குழந்தைக்கு என்ன பெயர்
அந்த குழந்தைக்கு போதி அமோர் ஓஷன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தனது குழந்தை கடல் அலைகளுக்கு இடையே எவ்வாறு பிறந்தது என்பது குறித்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணையும் அவரது கணவர் முழுமையாக நம்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். இயற்கையான பிரசவ முறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வந்தாலும் இதிலும் பல அபாயங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மருத்துவர்கள் அறிவுரை
ஏற்கெனவே வீட்டிலிருந்து பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பலர் ஆய்வு செய்து சிக்கலில் சிக்கி கொள்கிறார்கள். எனவே இது போன்றதொரு முறையை யாரும் ஊக்குவிக்க கூடாது என்றும் இதை மருத்துவரின் உதவியின்றி குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications