திடீரென பின்னால் ஓடி வந்து.. கணவனின் காதைக் கடித்து துப்பிய மனைவி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் பெண் ஒருவர் குடும்ப பிரச்சனையில், தனது கணவரின் வலது காதைக் கடித்து துண்டாக எடுத்திருக்கிறார். இதனால் அலறி துடித்த அந்த நபர் ஆப்ரேசன் செய்வதற்காக காதுடன் மருத்துவமனைக்கு விரைந்து ஓடி உள்ளார்.

குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி இடையே சண்டை வருவது இயல்பு. பெரும்பாலும் வாக்குவாதமாகவே முடிந்துவிடும். சில சமயங்களில் ஒருவரை ஒருவர் கண்ணத்தில் தாக்கி கொள்வார்கள். சில நேரங்களில் கிடைக்கும் பொருட்களை எடுத்து அடிப்பார்கள். இப்படியான சண்டைகள் பல வீடுகளின் இன்றும் நடந்து வருகிறது.

A woman has bitten off her husbands right ear due to a family dispute in Delhi

இந்நிலையில் டெல்லியின் புறநகர் பகுதியில் ஒரு பெண் கணவருடன் நடந்த சண்டையில் அவரது காதையே கடித்து எடுத்துவிட்டார். ஏன் இப்படி செய்தார் என்பது குறித்து பார்ப்போம்.

டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற ஊரில் வசிப்பவர் சுக்ராம் பாண்டே இவருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது. ஆனால் ஒன்றாகவே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணவனை வெறுத்து வந்த பாண்டேவின் மனைவி எப்படியாவது பிரிந்து சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளார். அதற்காக அவர் போட்ட சண்டையில் தான் கணவனின் காது பறிபோய் உள்ளது.

இது தொடர்பாக சுக்ராம் பாண்டே போலீசிடம் அளித்த புகாரில், "கடந்த நவம்பர் 20 ஆம் தேதி காலை 9.20 மணியளவில் எனது வீட்டின் வெளியே குப்பைகளை போடுவதற்காக போனேன். என் மனைவியிடம் வீட்டைச் சுத்தம் செய்யும்படி கூறினேன். குப்பையை போட்டு விட்டு நான் வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே எனது மனைவி காரணமே இல்லாமல் பிரச்சனை செய்து சண்டை போட்டார். குழந்தைகளுடன் தனியாக பிரிந்து செல்லப்போவதாகவும், அதனால் வீட்டை விற்று, பங்கை தரும்படி கேட்டார்.

அப்போது நான் என் மனைவியிடம் நிலைமையை சொல்லி புரிய வைக்க முயற்சித்தேன், ஆனால் மனைவியின் வாய் துர்நாற்றம் ஏற்பட்டது. இதனால் தள்ளி நின்றபடி நான் வீட்டின் நிலையை கூறினேன். அனால் என்னை , என் மனைவி அடிக்க முயன்றாள். ஆனால் நான் உடனே அவளைத் தள்ளிவிட்டேன். நான் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது, திடீரென பின்னால் ஓடி வந்து,அவள் ஆத்திரத்தில் என் வலது காதில் கடித்தாள்.

இதில் என் காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது. அலறி துடித்த என்னை, என் மகன் மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான். என் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு பாண்டே கூறினார்.

இதையடுத்து கணவனின் புகாரை ஏற்று பாண்டேவின் மனைவியின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது அபாயகரமான வழிமுறைகளில் ஒருவரை காயப்படுத்துதல்) இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பாண்டேவிற்கு ரோகினியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காதை ஒட்ட வைக்கம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அண்மையில் தான் துபாய் அழைத்து செல்லாத கணவனின் முகத்தில் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் புனேவில் நடந்திருந்தது. அடுத்ததாக கணவனின் காதை மனைவி கடித்து துப்பிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+