தறிகெட்டு ஓடிய டிரக்.. துணிந்து வந்த பெண்.. என்ன ஆனது தெரியுமா?
டெல்லி: சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் திடீரென சாலையில் தானாக ஓடிய நிலையில், சமயோசிதமாக யோசித்து இளம்பெண் ஒருவர் டிரக்கை துணிகரமாக நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பெண்களுக்கும், வாகனங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றும், அவர்களது வாகனம் ஓட்டும் திறனை பெரும்பாலும் கேலி செய்வதையும்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். வாகனம் ஓட்டத் தெரியாமல் கீழே விழுவது, சாக்கடைக்குள் விழுவது உள்ளிட்ட சில வீடியோக்கள் அடிக்கடி வைரலாவதும் வழக்கம். ஆனால், சாலையில் ஆளில்லாமல் ஓடிய டிரக்கை தனி ஆளாக நின்று கெத்தாக நிறுத்திய இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிறது.

அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருக்கிறார். திடீரென அங்கிருந்த டிரக் சாலையில் தானாக ஆளில்லாமல் ஓடத் துவங்குகிறது. இதைப் பார்த்த ஆண்கள் இருவர் டிரக்கை பின்புறமாக இழுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண் புத்திசாலித்தானமாக யோசித்து டிரக்கிற்கு விரைந்து சென்று ஹேண்ட் பிரேக்கை போட்டு உடனடியாக டிரக்கை நிறுத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் அப்பெண்ணின் தைரியம் மற்றும் சமயோசித புத்தியைப் பாராட்டியும், வாகனத்தின் பின்னால் நின்று டிரக்கை இழுத்துப் பிடிக்கச் செய்த சம்பவத்தை கலாய்த்தும் வருகின்றனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி எக்ஸ் தள பக்கத்தில் வெளியான இந்த வீடியோ ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களையும், 8 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் ஒரு பயனர், எல்லா கிரெடிட்டும் அந்த துணிச்சலான பெண்ணுக்குத்தான். சரியான நேரத்தில் தன் புத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னோக்கி இழுத்து நிறுத்த முயன்ற அந்த ஆண்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு பதிவர் சுமன் குமாரி, இது துணிச்சலான பெண்களுக்கான அடையாளம். அவர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, இக்கட்டான சூழலில் லெக் பிரேக்கைவிட ஹேண்ட் பிரேக் பயன்படுத்த வேண்டும் என்பதே பாடம் என்றும், அந்த இரண்டு பேரும் என்ன நினைத்தார்கள், பின்னோக்கி இழுத்தே டிரக்கை நிறுத்திவிட வேண்டும் என்றா? என்பது போன்ற பதிவுகளைப் பதிவிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications