இனி அனைவருக்கும் ஆதார் கிடைக்காது.. "இந்த" முக்கிய டாக்குமெண்ட் தேவை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: ஆதார் என்பது இப்போது நமது நாட்டில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான அரசு சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே புதிய ஆதார் அட்டை கோரி விண்ணப்பிப்போர் மிக முக்கியமான டாக்குமெண்டை சமர்ப்பிக்க வேண்டும்.. அப்போது தான் ஆதார் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் இப்போது ஆதார் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. சிலிண்டர் மானியம் தொடங்கி கிட்டதட்ட அனைத்து சலுகைகளுக்கும் இப்போது ஆதார் கட்டாயமாக உள்ளது.

ஆதார் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், முக்கியமான ஒரு ஆவணம் இல்லை என்றால் ஆதார் அட்டை தரப்படாது என்று இப்போது பாஜக முதல்வர் ஒருவர் அறிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த டாக்குமெண்ட் முக்கியம்: அதாவது எல்லையோர மாநிலமாக அசாம் இருக்கும் நிலையில் சட்டவிரோதமாகப் பலரும் உள்ளே நுழைவதாகப் புகார்கள் உள்ளன. இதற்கிடையே மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்ப ரசீது எண்ணைச் சமர்ப்பித்தால் மட்டுமே ஆதார் விண்ணப்பம் பரீசிலிக்கப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பிஸ்வா சர்மா, "ஆதார் விண்ணப்பங்களின் எண்ணிக்கை என்பது அதிகாரப்பூர்வ மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. இதனால் ஆதார் விண்ணப்பங்களில் மோசடி இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. குறிப்பாக 4 மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகையை விட ஆதார் அட்டை கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கூடுதலாகவும் பலர் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கிறார்கள். இது கவலைக்குரியதாக உள்ளது.
எதற்காக: எனவே, முறைகேடாக நமது நாட்டிற்குள் நுழைந்தவர்களும் சட்டவிரோதமாக ஆதாரை பெற முயல்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. எனவே, ஆதார் அட்டை வேண்டிய புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளோம். அசாமில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் ஊடுருவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இனிமேல் அசாமில் ஆதார் பெறுவது எளிதாக இருக்காது. புதிய ஆதார் அட்டைகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் கடுமையாக்க உள்ளோம்.

சில மாவட்டங்களில் முறைகேடுகள் அதிகம் உள்ளது. குறிப்பிட்ட துப்ரி மாவட்டத்தைச் சொல்லலாம். அங்கே மக்கள்தொகையை விட ஆதார் அட்டைகள் அதிகம் உள்ளன. இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே ஆதார் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் காரணமாகவே இப்போது இந்த முடிவை எடுத்துள்ளோம்.
அக். 1 முதல் கட்டுப்பாடு: அடுத்த 10 நாட்களுக்குள் இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும். ஒரு வேலை என்ஆர்சிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஆதார் வழங்கப்படாது. அதேநேரம் தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. அக்டோபர் 1 முதல் கடுமையான விதிகள் அமலுக்கு வரும்.
என்ஆர்சி செயல்முறையில் ஏற்கனவே பயோமெட்ரிக்ஸ் பதிவு செய்யப்பட்ட 9.55 லட்சம் பேர் ஆதார் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் எளிதாக ஆதாரை பெறலாம். மேலும், ஏற்கனவே ஆதார் வைத்திருப்போருக்கு இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காணவே இந்த நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications