ஆதார் அட்டை வாங்கி 10 வருஷமாச்சா.. உஷார் மக்களே.. புதிய அப்டேட் செய்வது அவசியம்.. இதோ விவரம்!
டெல்லி: 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அடையாள அட்டை வாங்கியவர் நீங்கள் எனில் நீங்கள் அதை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது மத்திய அரசின் ஆதார் ஏஜென்சி.
நமது நாட்டில் கடந்த ஜூலை மாத இறுதி வரையில் 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன . கடந்த ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதாரில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை (ஜூலை இறுதி) 63.55 கோடி ஆதார் எண்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த புதுப்பிப்புப் பணிகள் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆதார் மையங்களிலும், ஆன்லைன் ஆதார் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூலை மாதத்தில், ஆதார் மூலம் 152.5 கோடி அங்கீகார பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதாந்திர பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகை பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தொடர்ந்து தனிநபர் அடையாளங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.
ஜூலை வரை 152.5 கோடி ஆதார் எண் சரிபார்க்கப்பட்டுள்ளது. புதிதாக 53 லட்சம் ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிகம். சுமார் 900 மத்திய, மாநில சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் வழியாக பணம் பட்டுவாடா செய்யப்படும் முறையில் பயனாளிகளுக்கு ரூ.12,511 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அடையாள அட்டையை வாங்கியவர்கள் தங்களது விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது மத்திய அரசின் ஆதார் ஏஜென்சி. அப்படி அப்டேட் செய்வதற்கு தற்போதைய இருப்பிட சான்றிதழ், புதிய அடையாள அட்டையை சமர்ப்பித்து உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
https://uidai.gov.in/en/my-aadhaar/update-aadhaar.html இணையதளம் அல்லது உங்கள் வீடு, அலுவலகம் அருகே உள்ள ஆதார் மையத்துக்கு சென்று இந்த விவரங்களை அப்டேட் செய்யலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications