பாஜகவுக்கு ஏமாற்றம்.. டெல்லி, குஜராத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு?
டெல்லி: டெல்லி, குஜராத், அசாம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் தனித்து போட்டியிட முடிவு செய்த ஆம் ஆத்மி பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் மேற்கொண்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. இதற்காக இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. எனினும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறினார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்க முடியாது எனவும் திரிணாமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார்.
அதேபோல், கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் மோதிக் கொண்டு இருந்தது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்க மறுத்த ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடுவதாக அறிவித்தது.
எனினும் பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என அறிவித்து இருந்தது. இதற்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மட்டும் இன்றி குஜராத், அசாம், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எத்தனை சீட்கள் ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் -ஆம் ஆத்மி இடையே உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை ஒதுக்கும் என்றும் ஹரியானா, அசாமில் ஒரு இடங்களையும் ஒதுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications