பாஜக மட்டும் ஜெயித்தால் அரசியலை விட்டு வெளியேறுகிறோம்.. கொந்தளிக்கும் கெஜ்ரிவால் ? என்ன காரணம்..?!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தேசிய தலைநகரான டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் சரியான நேரத்தில் சரியான முறையில் நடத்தி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி கட்சி அரசியலை விட்டு வெளியேறும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, கடந்த முறை போலவே அருதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி

கெஜ்ரிவால் மாடல் டெல்லியில் மட்டுமல்லாது பஞ்சாபிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மாநகராட்சி

டெல்லி மாநகராட்சி

இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மாநகராட்சியாக இருந்த டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி வழக்கு டெல்லி கிழக்கு டெல்லி என மூன்று மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்கள் காரணமாக இந்த மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டதோடு பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க முடியாமல் போனது.

பாஜக அரசு

பாஜக அரசு

மேலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டதால் 3 மாநகராட்சி களையும் ஒரே மாநகராட்சியாக ஒருங்கிணைக்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லி மாநகராட்சி ஒருங்கிணைக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் புகார்

அரவிந்த் கெஜ்ரிவால் புகார்

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆம் ஆத்மி கட்சியை கண்டு பயந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் டெல்லி மாநகராட்சி தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி கட்சி அரசியலை விட்டு வெளியேறும் எனக் கூறியதோடு உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் தான் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய கட்சி மற்றும் ஒரு சிறிய தேர்தலை கண்டு பயந்து விட்டது என பேசினார்.

டெல்லி மாநகராட்சி

டெல்லி மாநகராட்சி

தொடர்ந்து செய்தியாக இடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தள்ளிவைப்பது ஆங்கிலேயர்களை கடும் போராட்டத்திற்குப் பிறகு நாட்டை விட்டு துரத்தி இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தியாகம் செய்த தியாகிகளை அவமதிப்பது போன்ற செயல் என்றும், தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக இன்று தலைநகரான டெல்லி மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க நினைப்பதாகவும் நாளை மாநிலங்கள் மற்றும் நாட்டின் தேர்தலைக் கூட மாற்றி வைப்பார்கள் என அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+