தொடர்ந்து ஆட்டம் காணும் ஆம் ஆத்மி.. மீண்டும் ஒரு எம்எல்ஏ பாஜகவிற்கு தாவினார்.. கெஜ்ரிவால் அதிர்ச்சி
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தேவேந்திர குமார் ஷெராவத் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த வெள்ளி அன்றுதான் ஆம் ஆத்மி எம்எல்ஏ அணில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு இது போதாத நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். வரிசையாக அந்த கட்சி நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முடியாதது, அரவிந்த் கெஜ்ரிவாலை சாலையில் நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது என்று வரிசையாக நிறைய சோதனைகளை அக்கட்சி சந்தித்து வருகிறது.

ஏற்கனவே கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வருகிறது. பாஜக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை காசு கொடுத்து வாங்க பார்க்கிறது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார்.
நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு 10 கோடி கொடுப்பதாக அமித் ஷா பேரம் பேசி இருக்கிறார் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்
இதையடுத்து தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தேவேந்திர குமார் ஷெராவத் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர் விஜய் கோயல் முன் அவர் பாஜகவில் இணைந்தார். 3 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் கட்சி மாறியது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications