கெஜ்ரிவால் சொன்னது போலவே நடந்தது.. ஆம் ஆத்மி எம்எல்ஏ பாஜகவிற்கு தாவினார்.. டெல்லியில் திருப்பம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி கட்சியில் கடந்த சில நாட்களாக சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வருகிறது. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதால் அங்கு சில பிரச்சனைகள் நிலவுவதாக கூறுகிறார்கள்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை காசு கொடுத்து வாங்க பார்க்கிறது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக மற்ற ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களும் புகார் அளித்து இருந்தனர்.
அதன்படி பாஜக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை கட்சி மாற வைக்க முயற்சி செய்கிறது. இதற்கு எல்லோருக்கும் 10 கோடி கொடுப்பதாக அமித் ஷா பேரம் பேசி இருக்கிறார் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர் விஜய் கோயல் முன் அவர் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து அணில் தற்போது பேட்டியளித்துள்ளார். நான் ஆம் ஆத்மி கட்சிக்காக 15 வருடம் உழைத்தேன். ஆனால் எனக்கு கட்சியில் மரியாதை கிடைக்கவில்லை. கட்சி சரியான திசையில் பயணிக்கவில்லை.
கட்சி தனது உண்மையான பாதையில் இருந்து தவறி வேறு திசையில் சென்றுவிட்டது. எனக்கு பாஜக பணம் கொடுத்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். எனக்கு அப்படி யாரும் பணம் கொடுக்கவில்லை. கெஜ்ரிவால் பொய்யான தகவல்களை அளிக்கிறார், என்று அணில் குறிப்பிட்டுள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications