டெல்லி: மெகா கூட்டணியை தவற விட்ட ஆம் ஆத்மி- காங்... மீண்டும் பாஜக கோட்டையாக விஸ்வரூபம்?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் உ.பி., ஜார்க்கண்ட் பாணியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்காமல் போனதால் டெல்லி மீண்டும் பாஜக கோட்டையாகும் என்கின்றன கள நிலவரம்.
லோக்சபா தேர்தலில் 6-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. டெல்லியின் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், விளையாட்டு வீரர்கள் கவுதம் காம்பீர், விஜேந்திரசிங் உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்கள். டெல்லியில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு முடிவுகளையே தந்திருக்கிறது.
2013 சட்டசபை தேர்தலில்; பாஜகவின் வாக்கு சதவீதம் 13% அதிகரித்தது. ஆம் ஆத்மிக்கு 3.4% வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 9.4%; பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4.3% வாக்குகள் குறைந்தன.
2014 லோக்சபா தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் பாஜக அள்ளிச் சென்றது. ஆனால் 2015 சட்டசபை தேர்தலில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்களித்தவர் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தனர். அக்கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 60ஐ கைப்பற்றியது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 21.4% அதிகரித்தது. பாஜகவின் வாக்கு விகிதம் 14.1% ஆக குறைந்தது. லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸுக்கு 5.4% வாக்குகள் குறைவாக கிடைத்தன.
2017-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை மீண்டும் தலைகீழானது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 26.2% ஆனது. பாஜகவுக்கு மிக அதிக வாக்குகள் கிடைத்தன. டெல்லியைப் பொறுத்தவரையில் இப்படித்தான் ஒவ்வொரு தேர்தல் நிலவரமும் மாறி மாறியே இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் கை கோர்த்ததால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாநில்ங்களிலும் மெகா கூட்டணிகளை அமைத்து பாஜகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் மெகா கூட்டணி அமைக்க தவறிவிட்டதால் பாஜக மீண்டும் 7 தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் நிலைதான் உள்ளது என்கின்றனர் டெல்லிவாசிகள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications