காங்கிரசுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.. ஆம் ஆத்மியுடன் டெல்லியில் தொகுதி பங்கீடு ஓவர்? எத்தனை தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி நேற்று தான் உபி மாநிலத்தில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த நிலையில், அடுத்தகட்டமாக அவர்கள் மேற்கு வங்கத்திலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. நேற்றைய தினம் தான் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு இறுதியானது.

AAP Congress to Agree seat sharing in Delhi after Uttar Pradesh deal finalized

அதன்படி உபி-இல் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அடுத்தகட்டமாக டெல்லியிலும் தொகுதி பேச்சுவார்த்தை நிறைவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி தொகுதிப் பங்கீடு: டெல்லியில் 7 லோக்சபா தேர்தல் இருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு இந்தியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறது.

தலைநகர் டெல்லியை பொறுத்தவரைக் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி மூன்று தொகுதிகளிலும் களமிறங்கும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்: காங்கிரஸ் ஆம் ஆத்மியை பொறுத்தவரை டெல்லி, பஞ்சாப் என இரு மாநிலங்களிலும் பிரதான கட்சியாக இருக்கிறது. இதில் பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடப் பரஸ்பர முடிவெடுத்துக் கொண்டன. பஞ்சாபைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தான் பிரதான கட்சிகள். அங்கே பாஜகவுக்குச் செல்வாக்கு இல்லை. இதனால் இரு கட்சிகளும் அங்கே தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ளன. பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், டெல்லியில் தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் தான் உபியில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியானது. உபியில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 63 இடங்களிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என இறுதி செய்யப்பட்டன. நேரு குடும்பத்தினரின் கோட்டைகளான ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியிலும் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என தெரிகிறது.

பிரியங்கா காந்தி: மேலும், இந்த லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தி லோக்சபாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு மாறியுள்ள நிலையில், அவரது ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம். மேலும், ராகுல் காந்தி வயநாட்டில் தொடர்ந்து போட்டியிடும் நிலையில், அமேதியிலும் கூட பிரியங்கா காந்தி மீண்டும் களமிறங்கலாம். அல்லது பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் மோத அவர் வாரணாசியிலும் கூட நேரடியாகப் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை இப்போது வரை மேற்கு வங்கம் மட்டுமே சிக்கலாக இருக்கிறது. அங்கே மம்தா- காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மம்தா தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால் அங்கே காங்கிரஸ் கட்சிக்குச் சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் என்ன நடக்கும் என்பது சில நாட்களில் உறுதியாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+