Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியா கூட்டணி என்று ஒன்று இல்லை.." விலகிய ஆம் ஆத்மி.. அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. நாட்டின் பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஒரே அணியில் போட்டியிட்டன. இருப்பினும், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி நன்றாக இருந்தாலும் மற்ற மாநிலங்களில் பிரச்சனை தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை, அதாவது ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு மாதம் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல எதிர்க்கட்சிகளும் இதில் பல முக்கிய விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளது.

AAP Exits INDIA Bloc Sanjay Singh Confirms Split ahead Parliament s monsoon session

ஆம் ஆத்மி விலகல்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் இல்லை

இது குறித்து சஞ்சய் சிங் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே இதைத் தெளிவுபடுத்திவிட்டார். எங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லை. லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் எங்கள் கட்சி தனித்துத் தான் போட்டியிட்டது" என்றார்.

2024 லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டன. இருப்பினும், அதன் பிறகு நடந்த ஹரியானா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன. பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

தனித்தே போட்டியிட்டோம்

இதையும் குறிப்பிட்ட சஞ்சய் சிங், "லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் தனியாகத் தான் போட்டியிட்டோம். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தனியாகவே போட்டியிட்டோம். அதேநேரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படுவோம். நாடாளுமன்ற விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாங்கள் பெற்று வருகிறோம். அவர்களும் எங்கள் ஆதரவைப் பெறுகிறார்கள்.

வலுவான மற்றும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக நாங்கள் எப்போதும் செயல்பட்டு வருகிறோம். எந்த பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கச் சனிக்கிழமை மாலை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற உள்ளது. பீகாரில் தேர்தல் சிறப்புத் திருத்தம், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துர் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. ஆம் ஆத்மி மட்டுமின்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+