பஞ்சாப் சட்டசபை தேர்தல்: 15 வேட்பாளர்களுடன் 4-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 15 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. பஞ்சாப் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள 4-வது வேட்பாளர் பட்டியல் இது.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்தே தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளது.

73 வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 15 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்டுள்ள 4-வது வேட்பாளர் பட்டியல் இதுவாகும். பஞ்சாப் சட்டசபையின் 117 தொகுதிகளில் இதுவரை மொத்தம் 73 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி சி.எம். வேட்பாளர்?
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் ஆம் ஆத்மி கட்சி அறிவிக்கவில்லை. இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சீக்கியர் ஒருவர்தான் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் என கூறியிருந்தார். இருந்தபோதும் தற்போது வரை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த எந்த யூகமும் வெளியாகவில்லை.

ஆம் ஆத்மிக்கு சாதகம்
பஞ்சாப் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபையே அமையும் எனவும் அக்கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி உட்கட்சி மோதல்களால் ஆட்சிய இழக்கும் என்பதும் கருத்து கணிப்புகள் முடிவுகள்.

கள நிலவரம் என்ன?
பஞ்சாப் மாநிலத்தில் தற்போதைய நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலிதளம், பாஜக, அமீர்ந்தர்சிங்கின் லோக் காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவுகிறது. சிரோமணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும் அமரீந்தர்சிங்கின் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்றது. 2-வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications