“டைஜீன்” ஜெல் குடிக்கிறீங்களா? உடனே பாட்டிலை செக் பண்ணுங்க.. மருந்துகளை திரும்பப் பெறும் Abbott !
டெல்லி: நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் 'டைஜீன்' ஜெல்லை திரும்பப் பெறுவதாக அப்போட் (Abbott) நிறுவனம் அறிவித்துள்ளது. கோவா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட டைஜீன் ஜெல் டானிக்கை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஒரு சில வாடிக்கையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விடுத்த எச்சரிக்கையால், செரிமானக் கோளாறுகளுக்கான ஆன்டாக்சிட் டைஜீன் ஜெல் மருந்தை அப்போட் மருந்து தயாரிப்பு நிறுவனம் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அளித்த புகாரில், ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்ட இந்த மருந்து வெள்ளை நிறத்தில் மாறிவிட்டதாகவும், சுவை கசப்பாக இருப்பதாகவும், மிகக் கடுமையான மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். வழக்கமாக அப்பாட் நிறுவனம் தயாரிக்கும் டைஜீன் ஜெல் இனிப்பு சுவையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நிறம் மற்றும் சுவை மாறியிருப்பதாக வந்த புகார்களால் கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட செரிமானக் கோளாறுகளுக்கான டைஜீன் ஜெல் என்ற மருந்தை, அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாகவும், இதனை நோயாளிகள் யாரேனும் எடுத்துக்கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு நேற்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், இந்த மருந்தானது பாதுகாப்பற்றது மற்றும் எதிர்மறை சிக்கல் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், ஒருவேளை, மிக நீண்ட நாள்களுக்கு இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவர்களை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், டைஜீன் மாத்திரைகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களின் மொத்த மருந்துப்பொருள் விற்பனையாளர்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், அப்போட் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் உற்பத்தியான இந்த குறிப்பிட்ட மருந்தை விற்பனையிலிருந்து நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளை இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தும்படியும், அந்த மருந்தை உட்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களும், சுகாதாரத் துறையில் இருப்பவர்களும், மிகவும் கவனமாக மருந்துகளை பரிந்துரைக்குமாறும், எந்த மருந்தை ஒரு நோயாளி எடுத்துக்கொண்டாலும் அதனால் ஏற்படும் நேர்மறை சிக்கல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
'டைஜீன்' ஜெல் குடித்து வரும் நபர்கள், தங்கள் பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பு மையம் விவரத்தைப் பார்க்கவும், அதில் கோவாவில் உள்ள அப்போட் மருந்து தயாரிப்பு மையத்தில் தயாரானதாக இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஜெல் நிறம், சுவை மாறியிருந்தால் அதைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications