எங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல்களில் குறித்து ஏபிபி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் சிறந்த முதல்வர் வேட்பாளராக மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்டவர்களை அம்மாநில மக்கள் அதிகளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேளரா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

ஏபிபி கருத்துக் கணிப்பு
இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது.

கேரளாவில் என்ன நிலைமை?
கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து ஆண்டுகள் பினராயி விஜயனே முதல்வராகத் தொடர வேண்டும் என 38.5% மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை 27% மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல கேரள சுகாதார துறை அமைச்சர் கே சைலஜா முதல்வராக வர வேண்டும் என 6.9% மக்களும் காங்கிரசின் சசி தரூர் முதல்வராக வேண்டும் என 5.2% மக்களும் தெரிவித்துள்ளனர்.

மம்தாவே முதலிடம்
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே அம்மாக்களின் முதல் சாய்ஸாக உள்ளார். அவரை 54.5% மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே நேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படும் திலீப் கோஷை 24.6% மக்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக பாஜகவின் முகுல் ராய்க்கு ஆதரவாக 8.5 சதவீத மக்களும் சிபிஐ (எம்) கட்சியின் சேர்ந்த சுஜோன் சக்ரோபோர்டி 3.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரனஜன் சவுத்ரிக்கு வெறும் 2.2% மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.

அசாமில் தொடரும் பாஜக ஆதிக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவாலே தொடர வேண்டும் என 43.3 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசின் கவுரவ் கோகோய்க்கு ஆதரவாக 26.4% மக்களும் மற்றொரு பாஜக தலைவர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவுக்கு ஆதரவாக 15.3% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications