ஜேஎன்யூ தாக்குதலை திட்டமிட்டு செய்த ஏபிவிபி.. பரபர வாட்ஸ் ஆப் ஆதாரங்கள்.. விசாரிக்கும் டெல்லி போலீஸ்
ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது வாட்ஸ் ஆப் ஆதாரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது வாட்ஸ் ஆப் ஆதாரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 60 பேரில் 37 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த வாரம் டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் அன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.
இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபிதான் நடத்தியது என்று புகார் உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஏபிவிபி மாணவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதிர்ச்சி அளிக்கிறது
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளியாகி வருகிறது. இதில் இடதுசாரி மாணவர்களை, அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள்தான் தாக்கியது என்பது குறித்து நிறைய ஆதாரங்கள் வெளியானது. வடஇந்திய ஊடகங்கள் இது தொடர்பாக நிறைய உண்மைகளை வெளியிட்டது.

இன்று எப்படி
இந்த நிலையில் இன்று டெல்லி சார்பாக சில முக்கிய தகவல்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜேஎன்யூ தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக வாட்ஸ் ஆப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகளுக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று பொருள்படும் வகையில் 'Unity against Left' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபி
இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு
உள்ளே இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உதவியுடன் இவர்கள் ஹாஸ்டல் உள்ளே வந்து இருக்கிறார்கள். இதில் ஏபிவிபி அமைப்பின் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் இருந்ததும் உறுதியாகி உள்ளது. இவர்தான் இந்த திட்டத்தை முன்னிருந்து வகுத்து இருக்கிறார்.

என்ன பிளான்
அந்த குழுவில் மாணவர்களை எப்படி தாக்க வேண்டும். எங்கிருந்து இரும்பு பொருட்கள், ஆசிட்களை கொண்டு வர வேண்டும். கேட் வாசலில் எத்தனை பேர் நிற்க வேண்டும், என்று விவாதித்து இருக்கிறார்கள். மாணவர்களை தாக்க இதில்தான் பிளான் போட்டுள்ளனர்.

மழுப்பல்
ஆனால் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் என்னுடைய போன் உடைந்து, அதை சரி செய்ய கொடுத்த போது, யாரோ தன்னை அந்த குழுவில் சேர்த்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications