நல்ல வளர்ச்சி! சாதித்த ஏசிசி நிறுவனம்.. சிமெண்ட் துறையில் சாதிக்கும் அதானி குழுமம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழுமத்தின் வேகமாக வளர்ந்து வரும் கட்டுமானப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி லிமிடெட், ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. பிரீமியம் வகைத் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிப்பு, RMX ஆலைகளின் விரிவாக்கம், விற்பனை வளர்ச்சி, செயல்பாட்டுத் திறன் மற்றும் சந்தையில் முன்னிலை வகிப்பது ஆகியவற்றின் காரணமாக இந்த நிதியாண்டின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

ஏசிசி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சிஇஓ வினோத் பேஹெட்டி இது குறித்து கூறுகையில், "எங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தின் வலிமையை எங்கள் செயல்திறன் பிரதிபலிக்கிறது. பிரீமியம் விற்பனை, சிறந்த செயல்பாடு, செலவுகளைக் குறைக்கும் திறன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை காரணமாக இந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம். விற்பனை செய்யும் அளவு அதிகரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முயற்சிகள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஷேர் ஹோல்டர்களுக்கு அதிக மதிப்பைக் கொடுக்க உதவுகின்றன. கர்பன் வெளியேற்றத்தில் நெட் ஜீரோ என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொறுப்புடன் செயல்பட்டு, புதுமைகளை உருவாக்கி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் முக்கிய நிறுவனமாக ஏசிசி இருக்கும்" என்றார்.

adani

விற்பனை அதிகரித்துள்ளது, செயல்பாட்டுத் திறன், செலவுக் கட்டுப்பாடு மற்றும் மூலதனச் செலவு மேலாண்மை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக ஏசிசி மாறியிருக்கிறது.

கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் விற்பனை 12% அதிகரித்துள்ளது. பிரீமியம் வகைத் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் மார்கெட் லீடராக மாறியுள்ளது.

WHRS power பங்கு 9.9%ல் இருந்து 19.9%ஆக அதிகரித்துள்ளது. சோலார் பவர் பங்கு 3.4%ல் இருந்து 11.3%ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பசுமை மின்சக்தியின் பங்கு 11.9% அதிகரித்து 26.2% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 2028 நிதியாண்டுக்குள் 60% பசுமை மின்சக்தி இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெட் கோக் பயன்பாடு மற்றும் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு காரணமாக, எரிபொருள் செலவு 10% குறைந்துள்ளது. இது ஒரு டன் ஒன்றுக்கு ரூ.1.73 இருந்து ரூ.1.56ஆக குறைந்துள்ளது.

லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் 5% குறைந்து, ஒரு டன்னுக்கு ரூ.972ஆக உள்ளது. சரக்கு போக்குவரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் PTPK ஒரு டன்னுக்கு ரூ. 4.15ஆக குறைந்துள்ளது.

இந்தக் காலாண்டில் கான்கிரீட் பிஸ்னஸில் லாபம் 12% அதிகரித்து 11.5 மில்லியன் டன்னாக உள்ளது. முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை பதிவாகியுள்ளது.. சூளை எரிபொருள் செலவு 10% குறைந்துள்ளது (ரூ. 1.73 இருந்து 1.56 ஆகக் குறைந்துள்ளது). மின் நுகர்வில் பசுமை மின்சக்தியின் பங்கு 11.9% அதிகரித்து 26.2% ஆக உயர்ந்துள்ளது.

இந்தாண்டு முதல் காலாண்டில் வருவாய் ரூ. 6,087 கோடியாக இருந்தது. இது கடந்தாண்டு முதல் காலாண்டு உடன் ஒப்பிடுகையில் 17% அதிகமாகும்.

ஆபரேட்டிங் EBITDA ரூ. 778 கோடியாக இருந்தது, இது கடந்தாண்டு முதல் காலாண்டு உடன் ஒப்பிடுகையில். EBITDA மார்ஜின் 12.8% ஆக உள்ளது.

நிகர மதிப்பு காலாண்டில் ரூ. 228 கோடி உயர்ந்து ரூ. 18,787 கோடியாக உள்ளது.

EPS, அதாவது ஒரு பங்கின் வருவாய் ரூ. 19.9 ஆக உள்ளது.

ஏசிசி மற்றும் அதன் தாய் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை நிகர பூஜ்ஜிய கார்பன் எமிஷன் மற்றும் குறுகிய கால இலக்குகளைக் கொண்ட இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களாகவும் உலகின் நான்காவது பெரிய சிமெண்ட் நிறுவனமாகவும் இருக்கிறது.

தனது டிஜிட்டல் BRSR (வணிகப் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கை) 2024-25 நிதியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் ESG செயல்திறன் பற்றிய தகவல்களை விரைவாகவும் எளிதாகவும் அணுக உதவுகிறது.

இந்தக் காலாண்டில் பசுமை மின்சாரம் பயன்பாடு 26.2% ஆக அதிகரித்துள்ளது.

நீர் பாதுகாப்பு, நிலையான பொருளாதார வளர்ச்சி, மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

பிரண்டிங் மற்றும் டெக்னிக்கல் சர்வீஸ்

நகர்ப்புற கட்டுமானத்தை உயர்த்தவும், உலகத்தரம் வாய்ந்த R&D திறன்களுடன் கூடிய அதிநவீனத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுடன் B2B விரிவாக்கம் செய்யவும் CREDAI உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

ஏசிசியின் பிரீமியம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தப் புதிய டிஜிட்டல் வீடியோ விளம்பரம் தொடங்கப்பட்டது, இது 125 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது.

11,001 வாடிக்கையாளர் தளங்களில் அதானி சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டது.

3,963 ஒப்பந்ததாரர்களை உள்ளடக்கிய 133 திறன் மேம்பாட்டு ஒர்க்ஷாப்கள் நடத்தப்பட்டன.

பிரபலமான இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் ஆடியோ விளம்பரங்களுடன் பிரீமியம் தயாரிப்பு விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டது. பிரீமியம் தயாரிப்பு விற்பனை 41%ஆக அதிகரித்துள்ளது.

IPL 2025இன் போது பிராண்ட்டிங் 600 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்தன.

டிஜிட்டல்மயமாக்கல்

DIGIPIN முயற்சி தொடங்கப்பட்டது. பட்ஜெட் கட்டுப்பாட்டை மேம்படுத்த SAP நிதி மேலாண்மை செயல்படுத்தப்பட்டது.

நேரடி கண்காணிப்பு மற்றும் ஆதரவுக்காக ஆலை கட்டுப்பாட்டு அணுகல் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான தரவு மாஸ்டர் டேட்டா மேனேஜ்மென்ட் (MDM) தொடங்கப்பட்டது.

சாதகமான பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளிலிருந்து நிலையான தேவை காரணமாக நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் தேவை 4%ஆக வலுவாக இருந்தது. இரண்டாவது நிதியாண்டிலும் தேவை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் தேவை 6% முதல் 7% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

ACC மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை TRA ஆராய்ச்சி நிறுவனத்தால் 'இந்தியாவின் மிகவும் நம்பகமான சிமெண்ட் பிராண்ட் 2025' ஆகத் தொடர்ந்து 3வது ஆண்டாக உள்ளது

சிமெண்ட் தொழில் பிரிவில் 'GEEF குளோபல் எமர்ஜிங் என்விரான்மென்டல் எக்ஸலன்ஸ் கம்பெனி ஆஃப் தி இயர் 2025' விருதைப் பெற்றது.

துர்கா பூஜை பிஸ்வாஷ் இ துர்கா விளம்பரம் afaqs-ன் மதிப்புமிக்க மார்க்கெட்டர்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளில் 'சிறந்த AI பவர்டு மல்டிமீடியா கன்டெண்ட்' பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+