அடுத்த வாரம் சுதந்திர தின விழா! தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி கைது! பெரும் நாச வேலை முறியடிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதைக் கோலாகலமான முறையில் கொண்டாடத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய பாதுகாப்பு முகமை
மேலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறையும் எச்சரித்து உள்ளது. இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆக்டிவ் உறுப்பினரைத் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. அவர் எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களிடம் நிதி திரட்டி கிரிப்டோகரன்சி வடிவில் சிரியா உள்ளிட்ட இடங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஒருவர் கைது
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸில் வசிக்கும் மொஹ்சின் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இது தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆகஸ்ட் 6ஆம் தேதி மொஹ்சின் அகமதுவின் குடியிருப்பில் தேடுதல் வேட்டை நடத்தினோம். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அந்த நபர், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்

தேசியப் பாதுகாப்பு முகமை
தேசியப் பாதுகாப்பு முகமைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்பையில் கடந்த ஜூன் 25இல் என்ஐஏ தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கொண்டது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மொஹ்சின் அகமது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆக்டிவ் உறுப்பினர் என்பது தெரிய வந்தது. மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக அவர் நிதி திட்டியதும் தெரிய வந்தது.

சிரியா
குறிப்பாக இங்க நிதி திரட்டி சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அனுப்பி உள்ளார். நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த கைது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை சீர்குலைக்கத் திட்டம் எதேனும் போடப்பட்டதா என்பது குறித்தும் அவருக்கு யாராவது கூட்டாளிகள் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications