திஷா ரவி கைது முற்றிலும் கொடுமையானது.. தேவையில்லாதது.. ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்தது முற்றிலும் கொடுமையான விஷயம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது காலிஸ்தான் ஆதரவாளர்களால் தான் இந்த வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக ட்விட்டரில் உலா வந்த டூல்கிட்டை இதற்கு ஆதரவாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட்.
அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் திஷா ரவி சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்.
இதையடுத்து திஷா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி போலீஸார் பெங்களூருவில் வைத்து திஷா ரவியை கைது செய்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் திஷா ரவியின் கைதை கண்டித்து வருகிறார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் திஷா ரவியை கைது செய்தது முற்றிலும் கொடுமையான விஷயம். இது தேவையில்லா கொடுமை. எனது ஆதரவு திஷா ரவிக்குத்தான் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications