ஆயுத படைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடைபெற்ற.. 9வது அதானி அகமதாபாத் மாரத்தான்!
டெல்லி: ஆயுதப்படை வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களுடன் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 9வது அதானி அகமதாபாத் மாரத்தான் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மொத்தம் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.40 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 4,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அதானி குழுமத்தின் இயக்குனர் பிரணவ் அதானி, இந்த நிகழ்வு 24,000க்கும் மேற்பட்ட தடைகளை வீரர்களுடன் ஒரு இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ஆயுதப்படைகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நட்பை காட்டுவதாக இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் கௌரவ் பக்கர் மற்றும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் பாராட்டியுள்ளனர். இந்த மாரத்தான் பல்வேறு பிரிவுகளை கொண்டிருந்தது. குறிப்பாக
முழு மாரத்தான்
அரை மாரத்தான்
10 கிலோ மீட்டர் ஓட்டம்
5 கிலோ மீட்டர் ஓட்டம்
என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
மாரத்தான் ஓட்ட பாதையானது அகமதாபாத்தின் பாரம்பரிய சின்னங்களான காந்தி ஆசிரமம், அடல் பாலம் மற்றும் எல்லீஸ் பாலம் போன்றவற்றை கடந்து சென்றது. முழு மாரத்தானில் ஆண்கள் பிரிவில், நிகில் சிங் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் 49 வினாடியில் போட்டியை முடித்திருக்கிறார். பெண்கள் பிரிவில் அஸ்வினி ஜாதவ் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் 49 வினாடிகளில் இலக்கை அடைந்திருக்கிறார்.
அதேபோல பாதுகாப்பு படை வீரர்களுக்கான மாரத்தான் போட்டியில், ஆண்கள் பிரிவில் மோகித் குமார் சர்மா இரண்டு மணி நேரம் 27 நிமிடம் 14 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றியாளராக மாறியுள்ளார். பெண்கள் பிரிவில் பூஜா என்பவர் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் 16 வினாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று இருக்கிறார்.
அரை மாரத்தான் பிரிவில் ஆண்கள் பட்டியலில் முகேஷ் குமார் 1 மணி நேரம் 3 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். பெண்கள் பிரிவில் ஃபர்ஹீன் ஃபிடோர்ஸ் என்பவர் 1 மணி நேரம் 3 நிமிடம் 48 வினாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். இந்த நிகழ்வு அதானி ஸ்போர்ட்ஸ் லைன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பிரணவ் அதானி, ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர், மேஜர் ஜெனரல் கௌரவ் பக்கர், நடிகை மந்திர் பேடி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற ககன் நாரங் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
மாரத்தானில் பங்கேற்ற வீரர்களுக்கான ஆடையை, புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆக்விப் வாணி வடிவமைத்திருந்தார். அகமதாபாத் மாநகராட்சி, நகர காவல் துறை, போக்குவரத்து போலீஸ், 108 அவசர சேவைகள் மற்றும் கேடி மருத்துவமனை ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications